by satheesh on | 2026-04-04 08:32 PM
சட்டமன்றத் தேர்தலில் போட்டி ஏன்? திருமா போடும் பதவி கணக்கு...!! பின்னணி என்ன?
தொடர்ந்து இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், இந்த முறை சட்டமன்ற தேர்தலில் காட்டு மன்னார் குடியில் போட்டியிட இருக்கிறார், இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் தொல் திருமாவளவன் எதற்காக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும். ஒரு வேலை சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானால் திருமாவளவன் வகித்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும், இப்படி ஒரு சூழலில் அவர் கட்சியை சேர்ந்த பலருக்கு சீட் கேட்டு போராடி வரும் நிலையில், அவர்களில் ஒருவருக்கு திருமாவளவன் வாய்ப்பு கொடுக்கலாம் என்கிற கேள்விக்கு பின்னனியில் திருமாவின் அரசியல் நகர்வுகள் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது., தமிழக அரசியலில் முன்னேப்பது இல்லாத வகையில் தற்பொழுது 5 முனை போட்டி நிலவி வருகிறது, திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, சீமான், சசிகலா என 5 முனை போட்டி நிலவி வரும் நிலையில், நடைபெறும் தேர்தலில் வெற்றி பெற போவது யார் என்கிற குழப்பம் தொடர்ந்து நீடித்து வருகிறது, இதில் விஜய் பெரும்பாலும் திமுகவுக்கு விழும் சிறுபாண்மை வாக்குங்களை பிரிப்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சசிகலா மற்றும் ராமதாஸ் கூட்டணி அதிமுக வாக்குகளை பிரிக்க வாய்ப்புள்ளது என்கிறது தேர்தல் கள நிலவரம் இதனடிப்படையில் வரும் சட்டசபை தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காமல் தொங்கு சட்டசபை கூட அமையலாம் என்கிற சில கருத்து கணிப்புகள் தெரிவிக்கிறது, அப்படி ஒரு சூழல் திமுகவுக்கு உருவானால் கடந்த காலங்களில் போன்று கூட்டணி கட்சிகளுக்கு இதயத்தில் இடம் கொடுத்து திமுக 5 வருடம் ஆட்சியை நடத்தியது போன்று இந்த முறை நடத்த முடியாத சூழலில் தான் திமுக கூட்டணி உள்ளது. இந்நிலையில் அப்படி தொங்கு சட்டசபை அமைந்தால் துணை முதல்வர் பதவியை பெற்று திமுக ஆட்சிக்கு ஆதரவளிக்கலாம் என்கிற முடிவில் தான் திருமாவளவன் சட்டசபை தேர்தலில் இறங்க முடிவு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. காட்டுமன்னார் கோவிலில் போட்டியிடும் திருமாவளவன், கடந்த 2016 ஆண்டு நடைபெற்ற இதே தொகுதியில் போட்டியிட்டு வெறும் 87 வாக்குகள் வித்தியாசத்தில் நூல் இலையில் தோல்வியை தழுவினார். குறிப்பாக கடந்த 2016 ஆண்டு அதிமுக - திமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் எதிர்த்து மக்கள் நல கூட்டணி சார்பில் போட்டியிட்ட திருமாவளவன் வெறும் 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியவர், இந்த முறை சுமார் 10 வருடங்களுக்கு பின்பு அதே காட்டுமன்னார் கோவில் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவன் வெற்றி வாய்ப்பு என்பது மிக பிரகாசமாக இருப்பதை அந்த தொகுதியில் பார்க்க முடிகிறது. இதற்கிடையில் விசிக சிட்டிங் எம் எல் ஏ ஆளூர் ஷாநவாஸ் மற்றும் பாலாஜி ஆகியோருக்கு இம்முறை மீண்டும் விசிக வில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படவில்லை, இதற்கு பின்னாலும் திருமாவின் அரசியல் உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது, அதாவது தேர்தலுக்கு பின்பு தொங்கு சட்டசபை அமைத்தால் திமுக ஆதரவாளராக இருக்க கூடிய ஆளூர் ஷாநவாஸ் , பாலாஜி ஆகியோர் முழுவதுமாக திமுக பக்கம் சாய்ந்து விடுவார்கள் என்கிற அச்சம் திருமாவளவனுக்கு இருந்துள்ளது என கூறப்படுகிறது. அதனால் தான் தேர்தலுக்கு பின்பு தொங்கு சட்டசபை அமைந்தால் தனக்கு கட்டுப்பட கூடியவர்களாக சட்டமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும் என்பதற்காக தான் ஆளூர் ஷாநவாஸ் , பாலாஜி ஆகியோருக்கு இம்முறை தேர்தலில் போட்டியிட திருமா வாய்ப்பு கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
சட்டசபை தேர்தலில் போட்டி - திருமா போட்ட கணக்கு ! பின்னணி என்ன.?
இன்சியல் - அப்பா யார் என்பது தேவையில்லை ! கோர்ட் அதிரடி !!
10/10 அமைச்சர் மூர்த்திக்கு இலக்கு ! ஸ்டாலின் வைத்த செக்! !
கிணற்றில் விழுந்த பேரன், பேத்தி..! பாட்டி செய்த செயல்...! மூவரும் பலி..!