by satheesh on | 2026-04-04 05:44 PM
10/10 அமைச்சர் மூர்த்திக்கு இலக்கு ! ஸ்டாலின் வைத்த செக் !!
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் மதுரையில் உள்ள 10 தொகுதிகளில் 5 அதிமுக , 5 திமுக கூட்டணி என பாதிக்கு பாதி என்கிற சம பலத்துடன் வெற்றி பெற்றது இரண்டு கூட்டணி கட்சிகளும், இதில் நேரடியாக திமுக கைவசம் 4 தொகுதியிலும், மதிமுக 1 தொகுதியிலும் வெற்றி பெற்று இருந்தது, ஆனால் அதிமுக வெற்றி பெற்ற 5 தொகுதிகளும் நேரடியாக வெற்றி பெற்ற தொகுதிகள், இந்நிலையில் அதிமுக - திமுக இரண்டு காட்சிகளிலும் சிட்டிங் எம் எல் ஏ களில் இம்முறை எந்த மாற்றமும் இல்லாமல் மீண்டும் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் மதுரையில் உள்ள 10 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்கிற முதல்வர் முக ஸ்டாலினின் உத்தரவுக்கு இணங்க 10 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெரும் என மதுரையில் நடந்து திமுக கூட்டம் ஒன்றில் அமைச்சர் மூர்த்தி சபதம் ஏற்று இருந்ததாக செய்திகள் வெளியானது, மேலும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கைவசம் இருக்கும் மதுரை மேற்கு தொகுதி மாவட்ட செயலாளராக இருக்கு கோ தளபதி மாவட்டத்திற்கு உட்பட்டு இருந்த நிலையில், அந்த தொகுதியை அமைச்சர் மூர்த்தி மாவட்ட செயலாளராக இருக்கும் மாவட்டத்திற்கு மாற்றினார் முதல்வர் முக ஸ்டாலின். அந்த வகையில் அமைச்சர் செல்லூர் ராஜு கைவசம் இருக்கும் மதுரை மேற்கு தொகுதியை மீட்டெடுக்க வேண்டும் என அமைச்சர் மூர்த்திக்கு அசைன்மென்ட் கொடுத்து இருந்தார் முதல்வர் முக ஸ்டாலின்.இந்நிலையில் மதுரையில் உள்ள 10 தொகுதியில் தற்பொழுது திமுக கைவசம் இருக்கும் மதுரை கிழக்கு தொகுதி, சோழவந்தான் தொகுதி ஆகிய இரண்டு தொகுதிகள் மீண்டும் திமுக வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது என்கிறது கள நிலவரம். அதே போன்று அதிமுக கைவசம் இருக்கும் மதுரை மேலூர் மற்றும் உசிலம்பட்டி ஆகிய 2 தொகுதிகளும் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ்க்கு ஒதுக்கிய நிலையில் மீண்டும் இந்த தொகுதியில் அதிமுக வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகளே உள்ளது. இதனை தொடர்ந்து திமுக கைவசம் இருக்கும் மதுரை வடக்கு தொகுதி தற்பொழுது அதிமுக சார்பில் போட்டியிடும் Dr சரவணன் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளதை பார்க்க முடிகிறது. மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக - திமுக இரண்டு கட்சிகளுக்கும் இடையில் மிக கடுமையான போட்டியை இம்முறை எதிர் பார்க்கலாம், அந்த வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இந்த தொகுதியை மீண்டும் தக்க வைப்பது அவருக்கு சவாலாக இருக்கும் என்பதை தேர்தல் களத்தில் பார்க்க முடிகிறது, திமுக சார்பில் அக்கட்சியின் செயற்குழு உறுப்பினர் ரகுபாலாஜி வேட்பாளராக அறிவிக்க பட்டுள்ளது, அதிமுக கைவசம் இருக்கும் மதுரை மேற்கு தொகுதி பறிபோகும் சூழல் உருவாகி உள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியை கடந்த முறை கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக ஒதுக்கியது, இதனால் மிக எளிதாக அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா கடந்த முறை வெற்றி பெற்றார், ஆனால் இந்த முறை நேரடியாக திமுக இந்த தொகுதியில் கிருத்திகா தங்கபாண்டியனை வேட்பாளராக நிறுத்தி இருக்கிறது. அந்த வகையில் திருப்பரங்குன்றம் தொகுதியும் தற்பொழுது அதிமுக கைவசம் இருந்து நழுவும் சூழல் உருவாகி உள்ளது. மதுரை திருமங்கலம் தொகுதியில் இம்முறை போட்டி மிக கடுமையாக இருப்பதை பார்க்க முடிகிறது, சசிகலா நிறுத்தியுள்ள வேட்பாளர் ஜீவிதா நாச்சியார் அதிமுக வாக்குகளை பிரிக்கும் பட்சத்தில் திமுக வேட்பாளரை சேடப்பட்டி மணிமாறன் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளதால், அதிமுக சார்பில் இந்த தொகுதியில் போட்டியிடும் ஆர் பி உதயகுமாருக்கு இந்த தேர்தல் மிக பெரிய சவாலாக அமைத்துள்ளது. மதுரை தெற்கு தொகுதியில் தற்பொழுது வரை இன்னும் கடும் இழுபறியில் இருக்கும் நிலையில், பிரச்சாரம் தொடங்கிய பின்பே இந்த தொகுதியின் கள நிலவரத்தை கணிக்க முடியும் என்கிற சூழலில் உள்ளது.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார் ,பெரியகுளம். தேனி.
சட்டசபை தேர்தலில் போட்டி - திருமா போட்ட கணக்கு ! பின்னணி என்ன.?
இன்சியல் - அப்பா யார் என்பது தேவையில்லை ! கோர்ட் அதிரடி !!
10/10 அமைச்சர் மூர்த்திக்கு இலக்கு ! ஸ்டாலின் வைத்த செக்! !
கிணற்றில் விழுந்த பேரன், பேத்தி..! பாட்டி செய்த செயல்...! மூவரும் பலி..!