by Vignesh Perumal on | 2026-04-04 01:17 PM
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள விருப்பாச்சி, மேல் தலையூத்து அருவி பகுதியில் குளிக்கச் சென்ற கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களில் நான்கு பேர் நீரில் மூழ்கி மாயமான நிலையில், தற்போது மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த பள்ளபட்டி பகுதியைச் சேர்ந்த 11 நண்பர்கள் குழுவாகச் சேர்ந்து ஒட்டன்சத்திரம் அருகே உள்ள விருப்பாச்சி அருவிக்குச் சுற்றுலா சென்றுள்ளனர்.
அருவியின் மேல் பகுதியான தலையூத்து நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக நீரின் வேகம் அதிகரித்ததாலும், ஆழமான பகுதிக்குச் சென்றதாலும் பின்வரும் நான்கு இளைஞர்கள் நீரில் மூழ்கி மாயமாகினர். குறிப்பாக ஆதில் (19), அயாஸ் (19), பயாஸ் (19), சதாம் உசேன் (18) ஆகியோர் மாயமாகி உள்ளனர்.
தகவல் அறிந்தவுடன் ஒட்டன்சத்திரம் தீயணைப்புத் துறையினர் மற்றும் ஒட்டன்சத்திரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
நீண்ட நேரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு, தீயணைப்புத் துறையினர் ஆதில் (19), அயாஸ் (19), மற்றும் பயாஸ் (19) ஆகிய மூன்று இளைஞர்களின் உடல்களை சடலமாக மீட்டனர்.
மாயமான மற்றொரு இளைஞரான சதாம் உசேன் (18) என்பவரின் உடலைத் தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் உள்ளூர் நீச்சல் வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
மீட்கப்பட்ட மூன்று உடல்களும் உடற்கூறு ஆய்வுக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஒட்டன்சத்திரம் போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழையினால், அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அனுமதியற்ற ஆழமான பகுதிகளுக்குச் சென்று குளிப்பதைத் தவிர்க்குமாறு சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறை மற்றும் காவல்துறை மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !