by satheesh on | 2026-04-03 09:37 PM
மாணவி கொலை வழக்கில் கைதானவருக்கு காவல் நீட்டிப்பு: தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் உத்தரவு!
தமிழகத்தையே உலுக்கிய விளாத்திகுளம் பள்ளி மாணவி கொலை வழக்கில் கைதான நபருக்கு, தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் காவல் நீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஒருவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டது. குளத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளியைத் தீவிரமாகத் தேடி வந்தனர். போலீசாரின் தீவிர விசாரணையின் பலனாக, இந்த வழக்கில் சாயல்குடியைச் சேர்ந்த தர்மமுனீஸ்வரன் என்பவர் கைது செய்யப்பட்டார். காவல்துறையினர் இந்த வழக்கின் தீவிரத்தைக் கருதி, வெறும் 20 நாட்களிலேயே நீதிமன்றத்தில் விரிவான குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர். தர்மமுனீஸ்வரனின் காவல் காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், அவர் காணொலிக் காட்சி மூலம் தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா, தர்மமுனீஸ்வரனுக்கு வருகிற ஏப்ரல் 16-ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு வழங்கி அதிரடி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் விரைவான நீதி கிடைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இணை ஆசிரியர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !