by Vignesh Perumal on | 2026-04-03 09:24 PM
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அண்மைக்காலமாகத் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், கள்ளிமந்தயம் அருகே பட்டப்பகலில் நடந்த இந்தத் துணிகரக் கொள்ளை அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளிமந்தயம் அடுத்த பொருளூர், வெருவாடிநாயக்கன் வலசு பகுதியை சேர்ந்த குப்புசாமி என்பவரின் மகன் செல்வகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று வீட்டைப் பூட்டிவிட்டு வெளியில் சென்றிருந்தனர். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் முன்கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அறையிலிருந்த பீரோவை உடைத்து, அதில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் தங்க நகைகளைத் திருடிக்கொண்டு தப்பிச் சென்றனர்.
வீட்டிற்குத் திரும்பிய செல்வகுமார், கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு நகைகள் மாயமாகியிருந்தது தெரியவந்தது. இது குறித்து அவர் உடனடியாகக் கள்ளிமந்தயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
தகவல் அறிந்த கள்ளிமந்தயம் காவல் நிலைய ஆய்வாளர் புகழேந்தி தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
திண்டுக்கல்லில் இருந்து வரவழைக்கப்பட்ட தடயவியல் நிபுணர்கள், பீரோ மற்றும் கதவுகளில் பதிவாகியிருந்த கொள்ளையர்களின் கைரேகைகளைச் சேகரித்தனர்.
மோப்ப நாய் வரவழைக்கப்பட்டுச் சோதனை செய்யப்பட்டது. அது வீட்டிலிருந்து சிறிது தூரம் ஓடிச் சென்று நின்றது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளைப் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடிய நபர்கள் குறித்துத் தீவிர விசாரணை நடைபெறுகிறது.
தேர்தல் பாதுகாப்புப் பணிகளில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், மக்கள் வெளியூர் செல்லும் போது தாலுகா அல்லது உள்ளூர் காவல் நிலையங்களுக்குத் தகவல் தெரிவிக்குமாறு ஆய்வாளர் புகழேந்தி அறிவுறுத்தியுள்ளார்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !