by satheesh on | 2026-04-03 02:55 PM
தமிழக பத்திரிகையாளர்கள் சங்கம் – ப. ஹரிஹரன் கடும் கண்டன அறிக்கை!
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சட்டவிரோதமாக அதிகாரிகள் அனுமதி இன்றி கனரக இயந்திரங்கள் (ஜேசிபி, ஹிட்டாச்சி உள்ளிட்டவை) தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்தது குறித்து உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த நியூஸ் தமிழ் 24×7 செய்தியாளர் திரு. குறிஞ்சி வேல் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கதும், ஜனநாயகத்திற்கு எதிரானதும் ஆகும். திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. செய்தி வெளியிட்டதற்காகவே குறிவைத்து, மது பாட்டில்களால் சரமாரியாக தாக்கி பலத்த காயமடையச் செய்திருப்பது, ஊடக சுதந்திரத்தையே நேரடியாக தாக்கும் அருவருப்பான செயல் ஆகும். தற்போது அவர் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது மிகுந்த கவலையளிக்கிறது. இந்த மிருகத்தனமான தாக்குதலை மேற்கொண்ட குற்றவாளிகள் மீது எந்த வித பாரபட்சமும் இன்றி உடனடி மற்றும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், சட்டவிரோதமாக கனரக வாகனங்களை இயக்கிய பின்னணி தொடர்பாகவும் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த சம்பவத்தில் அலட்சியம் காட்டியோ அல்லது மறைமுக ஆதரவு வழங்கியோ இருக்கும் அதிகாரிகள் இருந்தால், அவர்கள்மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதையும் தமிழக பத்திரிகையாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது. மாநில தலைமை தேர்தல் அதிகாரியும், திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் இச்சம்பவத்தில் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். காவல்துறை இந்த வழக்கை மிகுந்த தீவிரத்துடன் எடுத்துக் கொண்டு குற்றவாளிகளை விரைவில் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். ஊடகத்தினரின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்; உண்மை பேசும் பத்திரிகையாளர்களுக்கு எதிரான எந்தவொரு தாக்குதலும் கடுமையாக ஒடுக்கப்பட வேண்டும் -ப. ஹரிஹரன் தலைவர், தமிழக பத்திரிகையாளர்கள் சங்கம்.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !