by Vignesh Perumal on | 2025-03-19 04:39 PM
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 3 படி கிராம சபை கூட்டத்திற்குதலைவர் வராத நிலையில் துணை தலைவரும், தலைவர் துணை தலைவர் இருவரும் வராத நிலையில், அக்கூட்டத்திற்கு வந்துள்ள உறுபினர்களால் விருப்பத்தேர்வு படி கூட்டத்தில் உள்ள உறுப்பினர் ஒருவர் தலைமை வகித்தல் வேண்டும். மேலும் அரசு, குறிந்துரைக்கபடகூடிய பிற துறை அலுவலர்கள், அரசின் அறிவிக்கை வாயிலாக, இக்கிராமசபையில் கலந்துகொள்ள வேண்டும்.
இந்தக் கிராம சபைக் கூட்டத்தில், ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும், பொறுப்புணர்வை ஊக்குவித்தல், வளர்ச்சித் திட்டங்களை திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்தப்படுதல் மற்றும் பயனாளிகளின் விருப்பத்தின்படி பொதுமக்களின் பங்களிப்பை மேம்படுத்துதல் மற்றும் சமூக தணிக்கைக்கு வழி வகுத்தலே கிராம சபைக் கூட்டதின் நோக்கமாகும். கிராம மக்களின் கையிலிருக்கும் அதிகாரம், கிராம சபைக் கூட்ட நடவடிக்கைகள் ஆகும்.
இந்நிலையில், உலக தண்ணீர் தினத்தை ஒட்டி மார்ச் 22 அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டது. நிர்வாக காரணங்களால் இதனை மார்ச் 23 க்கு மாற்றம் செய்யப்பட்டது. மீண்டும் மார்ச் 29ம் தேதிக்கு கிராம சபை கூட்டத்தை மாற்றம் செய்து ஆணையர் பொன்னையா உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், இந்த கூட்டத்தில் கலைஞர் கனவு இல்ல திட்ட பயனாளிகளை தேர்வு செய்யவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!