| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Tamilnadu

பல்கலைக்கழக பேராசிரியர் நியமனம் அறிவிப்பு.! மகிழ்ச்சியிலும், மனவருத்தத்திலும் பேராசிரியர்கள்...!

by Vignesh Perumal on | 2025-03-17 09:58 PM

Share:


பல்கலைக்கழக பேராசிரியர் நியமனம் அறிவிப்பு.! மகிழ்ச்சியிலும்,  மனவருத்தத்திலும் பேராசிரியர்கள்...!

திருவள்ளுவர் பல்கலைக்கழகம் பல்வேறு துறைகளில் கெளரவ விரிவுரையாளர்கள் தேவைக்கான அறிவிப்பை அறிவித்திருக்கிற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறதாக பேராசிரியர்கள் கருதுகின்றனர். அதே சமயம் இன்றைய விலைவாசி உயர்வுக்கு ஏற்றார் போல் அவர்களின் ஊதியம் நிர்ணயிக்கப் படவில்லை என்பது வருத்தமளிப்பதாகவும், மேலும் விரிவுரையாளர்கள் சாதாரணமாக உருவாகிவிடுவதில்லை என்பதும் பரவலான கருதப்படுகின்றது. 

இருப்பினும், இப்பதவிக்கு முனைவர் பட்டம் அல்லது UGC யால் நிர்ணயிக்கப்பட்ட NET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அப்படி தேர்ச்சி பெற்றாலும் நேர்முகத் தேர்விலும் தேர்வு பெற வேண்டும். நிறைய ஆய்வுக் கட்டுரைகள் எழுதி வெளியிட்டிருக்க வேண்டும், இவ்வளவு இன்னல்களைக் கடந்து வரும் பேராசிரியர்களுக்கு எப்படி மாத ஊதியம் ரூ. 25000/- சரியாக இருக்கும். சாதாரண கொத்தனார் சம்பளம் ஒருநாளைக்கு ரூ.1200/- சித்தாள் சம்பளம் ரூ. 800 என்பதை பேராசிரியர்களுக்கான ஊதியத்தை நிர்ணயம் செய்பவர்கள் சிந்திக்க வேண்டும் என்று பேராசிரியர்கள் கருதுகின்றனர்.


இருப்பினும், இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள பக்கத்தை அனுமதிக்கவும்..

https://www.tvu.edu.in

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment