by Muthukamatchi on | 2025-03-16 11:12 AM
தேனி மாவட்டம் ஓடைப்பட்டி பேரூராட்சியில் அரங்கேறும் அடாவடி வசூல்
தேனி மாவட்டத்தில்மொத்தம் 22 பேரூராட்சிகள் உள்ளன.இந்தப் பேரூராட்சிகளில் மார்ச் மாதம் முடியும்முடியும் முன் வீட்டு வரி குழாய் வரி இதர வரிகள் பாக்கி இல்லாமல் செலுத்த வேண்டும் என ஒலிபெருக்கி மூலம் சொல்லிவிட்டு அதன் பிறகு நடவடிக்கை எடுக்க வேண்டும்.அவ்வாறு எடுக்கவில்லை என்றால் மார்ச் இறுதிக்குல் கட்டவில்லை என்றால் சம்மந்தப்பட்ட உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சட்டம்.ஆனால் ஓடைப்பட்டி பேரூராட்சியில் மகளீர்குலுக்கல் மூலம் போடப்பட்ட ஆட்களை வைத்து வீடுகளில் சென்று இரண்டு ஆண்டுகளாக வரி கட்டாத நபர்களின் பெண்களிடம் அடாவடியாக பேசி வசூல் செய்வதை அரங்கேற்றியுள்ளனர்.அவர்கள் அடாவடியாக பேசினால் தான் எங்களுக்கு சம்பளம் கொடுப்பார்கள் எனக்கூறி வருகின்றனர்.பேரூராட்சிகளின் இந்த நடவடிக்கை பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக உள்ளது.இதனை புகார் மனுவாக காவல்துறையிடம் கொடுத்தால் அவர்கள் வரியை கட்டிவிட்டு வாருங்கள் பேசிக் கொள்வோம் என்று கூறி வருகின்றனர்.பேரூராட்சிகளின் உயரதிகாரிகளுக்கு இது சம்பந்தமான புகாரை கொண்டு சென்று நியாயம் கேட்டு உள்ளார்கள். பேரூராட்சிகளின் இந்த நடவடிக்கை பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக உள்ளது.இதற்கு சேர்மனும்,நிர்வாக அதிகாரியும்,மற்றும் கிளார்க்கும் உடந்தை என தெரிகின்றது. வரி கட்டவில்லை என்றால் கேட்பது பேரூராட்சியின் கடமை. அதற்காக பெண்களை இழிவாக பேசுவதும் வரி கட்ட உனக்கு தகுதி இல்லை என்றால் செத்துப் போய் என்று கூறுவதும் யார் கொடுத்த அதிகாரம். பாதிக்கப்பட்ட பெண் தேனி காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்துள்ளார். இந்த புகார் ஓடைப்பட்டி காவல் நிலையத்தில் விசாரிப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்ட பொழுது இப்பொகார் குறித்து காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருகின்றனர். முதல்ல ஸ்டாலின் அவர்கள் இதில் உரிய கவனம் செலுத்தி அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க முன் வருவாரா??
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!