| | | | | | | | | | | | | | | | | | |
கல்வி கல்வி

மாணவர்களே உஷார் - நாளை கடைசி ;

by satheesh on | 2026-01-13 03:05 PM

Share:


மாணவர்களே உஷார்  - நாளை கடைசி  ;

*CUET PG 2026 விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு; ஜனவரி 14-ம் தேதியுடன் முடிவு!* மத்திய பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் முதுகலைப் படிப்புகளில் சேர்க்கைக்காக நடத்தப்படும் முதுகலை க்யூட் 2026 தேர்விற்கான விண்ணப்பங்கள் ஜனவரி 14-ம் தேதி வரை பெறப்படுகிறது. மாணவர்கள் கடைசி தேதி வரை காத்திருக்காமல் உடனே விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இளங்கலை பட்டப்படிப்பில் இறுதி ஆண்டு மாணவர்கள் மற்றும் முடித்தவர்கள் இத்தேர்விற்கு https://exams.nta.nic.in/cuet-pg/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் தேசிய அளவில் தேசிய தேர்வு முகமை (NTA) மூலம் தேர்வு நடத்தப்பட உள்ளது.  மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் சில குறிப்பிட்ட மாநில பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் முதுகலைப் பட்டப்படிப்புகளுக்கு கடந்த 2022-ம் ஆண்டு முதல் முதுகலை க்யூட் தேர்வின் மூலம் சேர்க்கை நடைபெறுகிறது. தேசிய தேர்வு முகமை (NTA) இத்தேர்வு நடத்தப்படுகிறது.  2026-27 கல்வி ஆண்டிற்கான இத்தேர்வு விண்ணப்பம் கடந்த டிசம்பர் 14-ம் தேதி முதல் தொடங்கியது. அதன்படி, தொடர்ந்து, ஜனவரி 14-ம் தேதி இரவு 11.50 மணி வரை விண்ணப்பம் ஆன்லைன் வழியாக பெறப்படுகிறது. , தேர்வு முகமை: தேசிய தேர்வு முகமை (NTA), தேர்வின் பெயர்: முதுகலை க்யூட் தேர்வு 2026, நோக்கம்: முதுகலை பட்டப்படிப்பு சேர்க்கை பாடப்பிரிவு எண்ணிக்கை:  157, தேர்வு முறை:  கணினி வழி தேர்வு, இணையதளம்:  https://exams.nta.nic.in/cuet-pg/, விண்ணப்பிக்க கடைசி நாள்:  14.01.2026 , தேர்வு நாள்: மார்ச் 2026, விண்ணப்பிப்பது எப்படி? படி 1 : மாணவர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்க https://exams.nta.nic.in/cuet-pg/ என்ற இணையதளத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.  படி 2 : இணையதளத்திற்கு நுழைந்த உடன், முகப்புப் பக்கத்தில் "Registration for CUET PG 2026 என இடம்பெற்று இருக்கும்.  படி 3 : அதில் சென்று, புதிய பதிவை மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து, தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை துள்ளியமாக வழங்க வேண்டும்.  படி 4 : தொடர்ந்து, விண்ணப்பித்திற்கான கட்டணத்தை செலுத்தி, சமர்பிக்க வேண்டும். இறுதியாக முழுமையாக நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.  விண்ணப்பத்தை நிரப்பியதுடன், உரிய கட்டணத்தை செலுத்தி நிறைவு செய்ய வேண்டும். மேலும், அதற்கான சான்றாக Confirmation Page பதிவிறக்கம் செய்து வைத்துகொள்ளவும்.  தேர்வு கட்டணம் எவ்வளவு?  பிரிவு   2 தாள் கட்டணம் கூடுதல் தாள் கட்டணம், பொது    ரூ.1,400   ரூ.700, பொதுப்பிரிவு   EWS/ OBC-NCL ரூ.1,200    ரூ.600 எஸ்சி, எஸ்டி, மூன்றாம் பாலினம் ரூ.1,100    ரூ.600 மாற்றுத்திறனாளி விண்ணப்பதார்கள் ரூ.1000    ரூ.60 வெளிநாட்டு மாணவர்கள் ரூ.7,000    ரூ.3,500. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? இந்தாண்டு இளங்கலைப் பட்டப்படிப்பில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் மற்றும் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்த மாணவர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். இத்தேர்வை எழுத வயது வரம்பு கிடையாது.

செய்தியாளர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment