| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் அரசியல்

விவசாயிகள் நிதிநிலையில் அதிருப்தி...! முன்னாள் முதல்வர் விமர்சனம்...!

by Vignesh Perumal on | 2025-03-15 05:46 PM

Share:


விவசாயிகள் நிதிநிலையில் அதிருப்தி...! முன்னாள் முதல்வர் விமர்சனம்...!

தமிழ்நாடு சட்டசபையில் நேற்று அதாவது, மார்ச்.14 2025-26 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இப்பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சுமார் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் புதிய அறிவிப்புகளை பட்டியலிட்டு காட்டினார்.


இச்சூழலில் இன்று 2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலையை, வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்நிலையில், வேளாண் பட்ஜெட் விவசாயிகளை விரக்தியில் ஆழ்த்தியுள்ளது என்று முன்னான் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் எக்ஸ் பக்கத்தில் விமர்சனம் தந்துள்ளார்.


அதாவது, வேளாண்மை துறை சார்ந்த அறிவிப்பு செய்யப்பட்டு கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு இன்னமும் காகிதம் செய்தி வடிவிலேயே உள்ளது என்று கூறியுள்ளார். மேலும், திமுக அரசால் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் இதுபோன்ற நிலையில் தான் உள்ளன என்றும், நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையாக குவிண்டால் ஒன்றுக்கு 2,500 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை திராவிட முன்னேற்றக் கழகம் அளித்தது. ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் முடியும் தருவாயிலும், இதுபோன்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.


2024-2025 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கை பக்கம் 42 இல், தென்னை ஊடுபயிராக வாழையும், நன்கு வளர்ந்த தென்னை விவசாயத்தில் ஜாதிக்காயும் ஊடுபயிராக பயிரிட கோடியே 70 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிப்பு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில், இத்திட்டம் எட்டாயிரம் ஏக்கரில் மூன்று கோடியே 23 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் என்று அறிவிப்பு தரப்பட்டிருந்தது. இருப்பினும், இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவில்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது என்று மிகவும் காட்டமாக தெரிவித்தார். 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment