by Vignesh Perumal on | 2025-03-15 08:34 AM
தமிழ்நாடு சட்டசபையில் நேற்று அதாவது, மார்ச்.14 2025-26 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இப்பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சுமார் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் புதிய அறிவிப்புகளை பட்டியலிட்டு காட்டினார்.
அதில், தமிழ்நாட்டில் அரசு நேரடி கட்டுப்பாட்டில் செயல்படும் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர்களை இந்த ஆண்டு இறுதிப் போட்டி நிரப்பப்படும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தும், தற்போது அதற்கான அதிகாரப்பூர்வ தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இச்சூழலில், 2025-2026ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் இன்று (சனிக்கிழமை) தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு சட்டசபையில் இன்று காலை 9.30 மணிக்கு வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். உள்ளார். சுமார் 1 மணி நேரம் அவர் உரையாற்றுவார் என்று தெரிகிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றுக்கொண்டது முதல் வேளாண்மைக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அவ்வேலையில், 5-வது முறையாக வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்பட்ஜெட்டில் வங்கிகளில் வேளாண்மைக்காக வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படுமா..? என்று விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் மிகவும் பெரிய ஆர்வத்துடன் உள்ளனர்.
இப்பட்ஜெட்டில், சட்டசபை கூட்டத் தொடர் 17 ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 17 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதமும், துறை சார்ந்த இரு அமைச்சர்களின் பதில் உரையும் இடம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. அதைத்தொடர்ந்து, 24 ஆம் தேதி முதல் துறை வாரியாக மனிதக் கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது மிகவும் முக்கியமானது.
செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
முறைகேடு புகார் எதிரொலி ! மாநகராட்சி துணை ஆணையர் அதிரடி சஸ்பெண்ட் !!
திண்டுக்கல்லில் பரபரப்பு...! கொலை வழக்கில் சாட்சி சொல்வதில் மோதல்...! 2 பேர் கைது...!
திக் திக் நிமிடங்கள்...! தகராறில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை..! பெரும் சோகம்...!
ஒரே நேரத்தில்...! டிஎஸ்பி உள்ளிட்ட 11 போலீசாருக்கு சிபிசிஐடி 'சம்மன்'...!
தேர்தல் பறக்கும் படை அதிரடி...! விதிமீறல்...! ரூ.96,500 பறிமுதல்...!