| | | | | | | | | | | | | | | | | | |
கல்வி கல்வி

மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி - தேனி கலெக்டர் அறிவிப்பு!

by satheesh on | 2025-12-06 05:55 PM

Share:


மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி - தேனி கலெக்டர் அறிவிப்பு!

தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்களை நினைவுகூறும் இலக்கியக்  கருத்தரங்கம்  மற்றும் 

பேச்சுப்போட்டி  நடைபெற உள்ளது –  மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல் : தேனி மாவட்டத்தில் கவிஞர் நா.காமராசன், திரு.வேதி (எ) வே.தில்லைநாயகம், வீறு கவியரசர் முடியரசன், திரு.சி.சு.செல்லப்பா ஆகியோர்களின்  தமிழ் இலக்கியப்பணி, தமிழ்த்தொண்டு, தமிழ்மொழிக்கான பங்களிப்பு ஆகியவற்றை நினைவுகூறும்வகையில்   08.12.2025 அன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில்  முற்பகல்                      09.30 மணிக்கு 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும்  பள்ளி  மாணவ / மாணவியர்களுக்கும், பிற்பகல் 02.30 மணிக்கு கல்லூரி மாணவ / மாணவியர்களுக்கும் பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது.  இப்பேச்சுப் போட்டிகளில் பங்கேற்கும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மேற்குறிப்பிட்ட தமிழ் அறிஞர்களின் தமிழ் இலக்கியப்பணி, தமிழ்த்தொண்டு, தமிழ்மொழிக்கான பங்களிப்பு குறித்து பேச வேண்டும். மேலும், பேச்சுப்போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாணவர்கள், கல்லூரி முதல்வர் அவர்களின்  பரிந்துரை படிவத்துடனும், பள்ளி மாணவர்கள் பள்ளித் தலைமையாசிரியர் அவர்களின் பரிந்துரைப் படிவத்துடனும் போட்டிகளில் பங்கேற்க வேண்டும்.  பள்ளி மாணவர்கள் 08.12.2025 அன்று முற்பகல்   09.00 மணிக்கும், கல்லூரிகள் மாணவர்கள் பிற்பகல் 02.00 மணிக்கும் வருகையை உறுதி செய்திடுதல்வேண்டும். இப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு முதல்பரிசாக தலா ரூ.5,000/-, இரண்டாம்பரிசாக தலா ரூ.3,000/-, மூன்றாம்பரிசாக தலா ரூ.2,000/-, பரிசுத்தொகை மற்றும்  பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கப்படும்.   மேலும், மேற்கூறிய தமிழ் அறிஞர்களை நினைவுகூறும் வகையில் தமிழ் இலக்கியக் கருத்தரங்கம் 10.12.2025 அன்று முற்பகல் 09.30 மணிக்கு பெரியகுளம்,  மேரி மாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இந்த இலக்கியக்  கருத்தரங்கத்தில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள், தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள், மாணவ / மாணவியர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு  தமிழ் இலக்கிய விழாவினைச் சிறப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்                          ரஞ்ஜீத் சிங்,  தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் ; N.சதீஷ்குமார்,  பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment