by Vignesh Perumal on | 2025-03-14 02:41 PM
தமிழ்நாட்டில் அரசு நேரடி கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர்களை இந்த ஆண்டு இறுதிப் போட்டி நிரப்பப்படும் என்று அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டு இருந்தும், தற்போது அதற்கான அதிகாரப்பூர்வ தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, இன்று கூடிய பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆசிரியர் நியமனங்கள் குறித்து முக்கிய தகவல் ஒன்றை அமைச்சர் வெளியிட்டுள்ளார். அதில் 1721 முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் 841 பட்டதாரி ஆசிரியர்கள் நேரடி நியமனம் சார்ந்த அறிவிக்கை விரைவில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.