by Vignesh Perumal on | 2025-11-29 01:04 PM
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் செயல்பட்டு வரும் அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருந்த தேர்வுகள், தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்படுவதாகப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ரவி அவர்கள் அறிவித்துள்ளார்.
தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு வருவது சிரமமாக இருக்கும். மேலும், மழையின் காரணமாக மாணவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அழகப்பா பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத் துறைகளில் இன்று (நவம்பர் 27, 2025) நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த அனைத்துத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுகின்றன என்று துணைவேந்தர் ரவி அறிவித்துள்ளார்.
ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான மாற்றுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும், தேர்வர்கள் அதற்கான அறிவிப்பைத் பல்கலைக்கழகத்தின் இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்