| | | | | | | | | | | | | | | | | | |
உலகம் உலகம்

30 நாட்கள் நிபந்தனை...! ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இரு நாடுகள்...!

by Vignesh Perumal on | 2025-03-14 08:16 AM

Share:


30 நாட்கள் நிபந்தனை...! ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இரு நாடுகள்...!

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தீடிரென கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பல்வேறு கால் புணர்ச்சி காரணமாக போர் தொடுத்தது. இருப்பினும், முதன் முதலில் ரஷியா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையிலான எல்லையில் உள்ள உக்ரைனின் பெரும்பாலான பகுதியை ரஷியா நாடு முழுவதுமாக ஆக்கிரமித்தது. இதனைத் தொடர்ந்து உலக வல்லரசு நாடு வரிசையில் முதலிடம் பெறும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ராணுவ உதவி வழங்க, உக்ரைன் ரஷியாவிற்கு பதிலடி தந்தது. இதனால் ரஷியா பெரும்பாலான இடங்களில் பின்னடைவை சந்தித்தது.


இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான போர் கடந்த 3 வருடங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது டிரோன் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். இதற்கிடையே 30 நாள் போர் நிறுத்தம் திட்டத்திற்கு உக்ரைன் நாடு தனது ஒப்புதலை தெரிவிக்கிறது.


இந்தத் திட்டம் சார்ந்து அமெரிக்காவிடமிருந்து முறையான விளக்கத்திற்காகக் காத்திருப்பதாகவும், அதிபர் புதின் மற்றும் அதிபர் டிரம்ப் ஆகிய இரு நாட்டு அதிபர்களுக்கு போன்ற பேச்சுவார்த்தை நடைபெற விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என ரஷிய நாட்டுத் தரப்பில் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இச்சூழலில், உக்ரைன் நாட்டுடன் போரை 30 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்த ரஷியாவும் பல்வேறு நிபந்தனைகளுடன் ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.


செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now
Search
Ads

Recent News


Leave a Comment