by admin on | 2025-03-13 09:45 PM
அங்கக விளைப்பொருட்கள் வர்த்தக கண்காட்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தேனி மாவட்டம், பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தோட்டக்கலை-மலைப்பயிர்கள் துறையின் சார்பில் அங்கக விளைப்பொருட்களை சந்தைப்படுத்துதல் மற்றும் வர்த்தக கண்காட்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திருரஞ்ஜீத் சிங், இ.ஆப, அவர்கள் தலைமையில் இன்று (13.03.2025) நடைபெற்றது.
விவசாயிகள் உற்பத்தி செய்யும் அங்கக விளைபொருட்களை பிரபலப்படுத்தும் நோக்கில் பாரம்பரிய வேளாண் வளர்ச்சித் திட்டம் 2024 2025-இன் கீழ் போடிநாயக்கனூர், சின்னமனூர், கம்பம். பெரியகுளம், உத்தமபாளையம் ஆகிய 5 வட்டாரங்களில் உள்ள விவசாயிகளை குழுவாக பிரித்து குழுவிலுள்ள விவசாயிகள் உற்பத்தி செய்யும் உற்பத்தி செய்யும் அங்கக விளைபொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.
இக்கண்காட்சியில் இயற்கை இடுபொருள்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபேக்டீரியா மற்றும் சூடோமோனாஸ் அடங்கிய தொகுப்பை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விவசாயிகளுக்கு வழங்கினார்
அதனைத் தொடர்ந்து, பெரியகுளம் சார் ஆட்சியர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் நில அளவை பதிவேடுகள், பட்டா சிட்டா அடங்கல் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரசின் சான்றிதழ் விபரம், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் இதர பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள்.
பெரியகுளம் கிளை சிறைச்சாலையில் ஆய்வு மேற்கொண்டு கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு. உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும். நூலகத்தில் பராமரிக்கப்படும் புத்தகங்கள், கண்காணிப்பு கேமிரா குறித்தும் கேட்டறிந்தார். மேலும், கைதிகளுக்கு தினசரி யோகாசன பயிற்சி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பெரியகுளம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை, உள்நோயாளிகள் பிரிவில் உள்ள படுக்கை வசதி, புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற வருகை தந்த பொதுமக்களின் எண்ணிக்கை, சிகிச்சை அளிக்கப்படும் விதம். மருந்து, மாத்திரைகளின் இருப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் மற்றும் வருகை பதிவேடு மற்றும் பிற பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வுகளில் பெரியகுளம் சார் ஆட்சியர் ரஜத் பிடன், இ.ஆய, கல்லூரி முதல்வர் ராஜாங்கம், தோட்டக்கலை துணை இயக்குநர் திருமதி நிர்மலா, வட்டாட்சியர் மருதுபாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.