| | | | | | | | | | | | | | | | | | |
TAMILNADU Tamilnadu

சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடு.....????

by Muthukamatchi on | 2025-03-13 08:10 PM

Share:


சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடு.....????

உதகை, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கட்டுப்பாடு.உதகைக்கு வார நாட்களில் 6,000, வார இறுதி நாட்களில் 8,000 சுற்றுலா வாகனங்கள் மட்டும் இயக்க வேண்டும்.கொடைக்கானலுக்கு வார நாட்களில் 4,000 வார இறுதி நாட்களில் 6,000 சுற்றுலா வாகனங்களுக்கு மட்டும் அனுமதி.அரசு பேருந்து, ரயில்கள் மூலம் வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை.உள்ளூர் வாகனங்கள், விவசாய பொருட்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கும் எந்தக் கட்டுப்பாடும் இல்லை.கட்டுப்பாடுகளை ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தி ஏப்ரல் 25ல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு.இந்த உத்தரவுகள் ஜூன் மாதம் வரை அமலில் இருக்க வேண்டும்.மலை அடிவாரத்தில் இருந்து நகரங்களுக்கு செல்ல மினி மின்சார பேருந்துகள் இயக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.உதகை, கொடைக்கானலுக்கு எத்தனை சுற்றுலா வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்த வழக்கு ஏப்ரல் 25க்கு தள்ளிவைப்பு.

WhatsApp Group Join Now
Search
Ads

Recent News


Leave a Comment