by boopalan on | 2025-03-13 04:19 PM
'கோடநாடு வழக்கு" - ஓய்வுபெற்ற கூடுதல் டி.எஸ்.பி. ஆஜர் !!.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஓய்வுபெற்ற கூடுதல் டி.எஸ்.பி. பெருமாள்சாமி சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜரானார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தனி பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்தவர் பெருமாள்சாமி. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மிகுந்த நம்பிக்கைக்கு உரியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனி பாதுகாப்பு அதிகாரி வீரபெருமாள் ஆஜரான நிலையில், இன்று பெருமாள்சாமி ஆஜராகியுள்ளார். மற்றொரு பாதுகாப்பு அதிகாரியான ராஜா, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் விசாரணைக்கு ஆஜராகினார் என்பது குறிப்பிடத்தக்கது. கோடநாடு வழக்கில் இதுவரை 250 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.