முதல்வர் ஸ்டாலின் முன்னெடுப்புக்கு ரேவந்த் ரெட்டி ஆதரவு
by boopalan on |
2025-03-13 03:23 PM
Share:
Link copied to clipboard!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெடுப்புக்கு, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆதரவு !!.
தொகுதி சீரமைப்பு என்பது தென் மாநிலங்களுக்கு எதிரானது என தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். தொகுதி மறுசீரமைப்பின் ஆபத்தை உணர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பான முன்னெடுப்பை செய்துள்ளார். தமிழ்நாடு அரசின் முன்னெடுப்புக்கு வாழ்த்துகள் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள முன்னெடுப்புக்கு முழு ஆதரவு தரப்போவதாகவும்., நடக்கப்போவது தொகுதி மறுசீரமைப்பு அல்ல; மாறாக தென்னிந்தியாவின் தொகுதிகளை குறைக்கும் நடவடிக்கை எனவும் கருத்து கூறியுள்ளார்.
மேலும் காங்கிரஸ் மேலிட அனுமதி பெற்று 22ம் தேதி நடைபெறும் தொகுதி மறுவரையறை குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பேன் என ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார்.