| | | | | | | | | | | | | | | | | | |
TAMILNADU Theni District

பெரியகுளத்தில் தேர் திருவிழா நடைபெறுமா?

by Satheesh on | 2025-03-13 03:14 PM

Share:


பெரியகுளத்தில் தேர் திருவிழா நடைபெறுமா?

தேனி : பெரியகுளம் நகரின் போக்குவரத்து நிறைந்த,  சோத்துப்பாறை  அணைக்கு செல்லும் பிரதான  ரோட்டில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு அருகில் அவசரகதியில் பாலம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இன்னும் சில நாட்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி உத்திர திருத்தேர் விழா நடைபெற இருக்கின்ற  நிலையில், 10 நாட்கள் சுவாமிகள் நகர்வலம் வருவதற்கும் தடை ஏற்பட்டுள்ளது. இதனால், தேர் திருவிழா நடக்குமா ? என பல்வேறு தரப்பிலும் சந்தேகம் எழுப்பப்படுகிறது. பாலம் கட்டஉத்தேசிக்கப்பட்ட நிலையில்  சம்பந்தப்பட்ட துறைகளிடம் எந்தவித கருத்தும் கேட்காமல் நெடுஞ்சாலைத்துறை தன்னிச்சையாக செயல்பட்டு அவசரகதியில் பாலம் கட்டும் பணி தொடங்கி உள்ளது. அவசரகதியில் பணிகள் நடப்பதால்,  கனரக வாகனங்கள்  மற்றும் தேர் பவனி செல்லக்கூடிய  நிலையில், உறுதியான தரமான கட்டுமானம் இருக்குமா?  என கேள்வி எழுந்துள்ளது. மேலும், தேர் திருவிழா நடைபெற இருக்கும் நிலையில் இந்து சமய அறநிலையத்துறை எந்தவித நடவடிக்கையையும் எடுத்ததாக தெரியவில்லை. இதனால், தேர் திருவிழாநடக்குமா? இதனிடையே, பணி நடைபெறும் இடத்தில் நெடுஞ்சாலைத் துறையினர் யாரும் மேற்பார்வை செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிருபர் :  N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.

WhatsApp Group Join Now
Search
Ads

Recent News


Leave a Comment