by admin on | 2025-03-13 05:02 AM
தேனி மாவட்டம் போடி JK பட்டியில் 24 மனை தெலுங்கு செட்டியார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு சாத்தாவுராயன் திருக்கோவிலின் மஹா கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
நடு இரவில் இருந்தே பல்வேறு யாகசாக பூஜைகள் நடத்தப்பட்டு பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டது இன்று காலை இந்தியாவின் புனித நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட நன்னீரால் கலச கும்பங்கள் அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
இந்த கும்பாபிஷேக விழாவில் தலைவர் K.P. முருகன், செயலாளர் சரவணன், பொருளாளர் P.T.பாஸ்கர் மற்றும் தேசிய செட்டியார் பேரவையின் தமிழ்நாடு மாநில தலைவர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சாத்தாவுராயனை வழிபட்டார். ஆயிரக்கணக்கில் கலந்து கொண்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பாக அன்னதானமும் பிரசாதமும் வழங்கப்பட்டது.