| | | | | | | | | | | | | | | | | | |
ஆன்மிகம் HINDUISM

இன்றைய கோபுர தரிசனம்...!!!!

by Muthukamatchi on | 2025-03-13 03:30 AM

Share:


இன்றைய கோபுர தரிசனம்...!!!!

அருள்மிகு திருவாரூர் கமலாம்பிகை கோயில்*கமலாம்பிகை தனிக் கோவிலில் தவக்கோலத்தில், கால் மேல்கால் போட்டுக்கொண்டு யோகாசனமாக வீற்றிக்கிறாள். இந்த அம்பிகை அழகே உருவானவள்.சக்தி பீடங்களில் ஒன்றான திருவாரூரில் அம்பிகை இருவகைத் திருஉருவங்களுடன் காட்சி தருகிறாள். ஒன்று நீலோத்பலாம்பிகை தோற்றம். மற்றொன்று கமலாம்பிகை தோற்றம். கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் நீலோத்பலாம்பிகைக்கு தனி ஆலயம் உள்ளது. அங்கு அவள் நின்ற கோலத்தில் வலது திருக்கரத்தில் கருங்குவளை மலர் ஒன்றை ஏந்திய வண்ணம் காட்சி தருகின்றாள். அம்பிகையின் அருகிலே தோழி ஒருத்தி தமது தோள் மீது பாலமுருகனைச் சுமந்திருக்க முருகனின் சுட்டு விரலைத் தனது இடது கரத்தால் பற்றி நிற்கின்றாள். பிற எந்தத் தலத்திலும் காணக் கிடைக்காத அற்புதக் காட்சி இது.

WhatsApp Group Join Now
Search
Ads

Recent News


Leave a Comment