by Muthukamatchi on | 2025-03-12 09:41 PM
பழனி அருகே போலி வருமான வரித்துறை அதிகாரி கைது*திண்டுக்கல் மாவட்டம் பழனி சத்திரப்பட்டி காவல் நிலைய எல்லை உட்பட்ட பகுதியில் அண்ணாமலை சேம்பர் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரி போன்று மிரட்டி பணம் பறிக்க முயன்ற போலி வருமானவரித்துறை அதிகாரி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் சந்திரசேகர்(75) என்பவரை சத்திரப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் கவிதா தலைமையிலான போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
படம் செய்தி மோகன் கணேஷ் திண்டுக்கல்.