| | | | | | | | | | | | | | | | | | |
TAMILNADU Theni District

மக்கள் தொடர்பு முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய கலெக்டர்....!!!

by admin on | 2025-03-12 08:26 PM

Share:


மக்கள் தொடர்பு முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய கலெக்டர்....!!!

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், கோத்தலூத்து ஊராட்சியில் இன்று (12032025) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 178 பயனாளிகளுக்கு ரூ.1,60,44,658/- மதிப்பிலான பல்வேறு அரசின் நலத்திட்ட உதவிகளை ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.மகாராஜன் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், இ.ஆப, வழங்கினார்.


இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக அரசுத்துறை அலுவலகங்களுக்கு நேரில் சென்று அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி வரும் நிலையினை மாற்றி, மாதம் ஒருமுறை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒரு கிராமத்தினை தேர்ந்தெடுத்து அனைத்து துறை அலுவலர்களும் மக்களைத் தேடி, நேரில் சென்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று அதற்கு தீர்வுகாணும் வகையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக, பேருந்து வசதி இல்லாத, மலைவாழ் மக்களைத் தேடிச்சென்று அரசின் திட்டங்களை எடுத்துக்கூறி விளக்கி, அவர்களுடைய குறைகளை போக்குதல் வேண்டும் முகாம் நடக்கும் ஒரு வாரம் முன்பாகவே தொடர்புடைய துறை அலுவலர்கள் சம்மந்தப்பட்ட ஊரில் எந்த மாதிரியான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. அதன் தற்போதைய நிலை குறித்து நிறைவு அறிக்கை (Completion Report) சமர்ப்பிக்க வேண்டும். தொடர்புடைய பள்ளி, கல்லூரிகளில் போதுமான வசதிகள் உள்ளனவா என்பதனையும் உறுதி செய்ய வேண்டும். முதல்வர் மருந்தகம் போன்ற புதுப்புது திட்டங்களை செயல்படுத்துவதோடு மட்டுமில்லாமல், ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு சென்றடையும் வகையில் செயல்புரிய வேண்டும். பொதுமக்கள் நேரடியாக தொடர்புடைய துறையை அணுகுவதற்கு ஏதுவாக, துறை முகவரியினை பொதுமக்கள் அறிந்து கொள்ளச் செய்ய வெண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இன்றைய தினம் நடைபெற்ற முகாமில், வருவாய் துறையின் சார்பில், பட்டா மாறுதல் 4 நபர்களுக்கும், பட்டா மாறுதல் உட்பிரிவு 13 நபர்களுக்கும், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் இயற்கை மரண உதவித்தொகை தலா ரூ.22,500/வீதம் 15 நபர்களுக்கு ரூ 3,27,500/ முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் தலா ரூ.5 இலட்சம் மதிப்பிலான காப்பீடு அட்டைகள் 30 நபர்களுக்கும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை (சீர்மரபினர் நல வாரிய அடையாள அட்டை) 05 நபர்களுக்கும். தோட்டக்கலைத்துறையின் சார்பில் ரூ.14,300 மதிப்பிலான விசை தெளிப்பான், தென்னை கன்றுகள் 2 நபர்களுக்கும், வேளாண்மைத்துறையின் சார்பில் ரூ.2858 உளுந்து விதை, மண்புழு உர படுகை விநியோகம் 2 நபர்களுக்கும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 14 நபர்களுக்கு சுயதொழில் தொடங்க ரூ.7,00,000/கடனுதவியும் என மொத்தம் 85 பயனாளிகளுக்கு ரூ.160,44,658 - மதிப்பிலான பல்வேறு அரசின் நலத்திட்ட உதவிகளையும், 93 நபர்களுக்கு இணையவழி சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

முன்னதாக மக்கள் தொடர்பு முகாமில், பல்வேறு துறையின் சார்பில், அரசின் நலத்திட்டங்கள் குறித்து, பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை பார்வையிட்டார்.அதனைத்தொடர்ந்து கதிர்நரசிங்கபுரம் அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளியில் சத்துணவு திட்டத்தின்கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாணவர்களுடன் இணைந்து மதிய உணவருந்தினார்.


இம்முகாமில் பெரியகுளம் சார் ஆட்சியர் ரஜத் பீடன், இ.ஆ.ப. தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) திருமதி சாந்தி, இணை இயக்குநர் (வேளாண்மை) திருமதி.சாந்தாமணி, இணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) திருமதி.கலைச்செல்வி. துணை இயக்குநர் (தோட்டக்கலை) திருமதி.நிர்மலா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் நேரு, மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி மாரிசெல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) அண்ணாதுரை, உதவி இயக்குநர் (மாவட்ட தொழில் மையம்) மோகன்ராஜ், தாட்கோ மேலாளர் திருமதி சரளா, வட்டாட்சியர் ஜாஹீர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் .ஜெகதீஷ்சந்திரபோஸ், திசரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

WhatsApp Group Join Now
Search
Ads

Recent News


Leave a Comment