by Muthukamatchi on | 2025-03-12 06:28 PM
சர்வதேச மகளிர் தினமான-மார்ச் 8' தினத்தை முன்னிட்டு...இன்று(12.03.2025) பெரியகுளம் எல்ஐசி அலுவலக கிளை ,அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பெரியகுளம் கிளை சங்கம் மற்றும் மதுரை அப்போலோ மருத்துவமனையும் இணைந்து மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை பெரியகுளம் கிளை நிர்வாக அதிகாரி ரவி துவக்கி வைத்தார் மற்றும் ஊழியர் சங்க நிர்வாகிகள் சசிக்குமார், கரந்தமலை, நாகபாண்டி, மகளிர் பொறுப்பாளர் ஷிலாதேவி மற்றும் மகளிர் தோழர்கள், ஊழியர்கள்,அதிகாரிகள், வளர்ச்சி அதிகாரிகள், முகவ நண்பர்கள் மற்றும் பாலிசிதாரர்கள் அனைவரும் முழுமையாக கலந்து கொண்டனர்.இறுதியாக அப்போலோ மருத்துவமனை குழு சார்பாக சசிக்குமார் அவர்கள் நன்றி தெரிவித்து முகாமை நிறைவு செய்தார்.