by Muthukamatchi on | 2025-03-12 11:54 AM
பல தினங்களுக்கு முன்பு ஒரு தலை காதல் காரணமாக கரூரில் கல்லூரி மாணவியை வேனில் சிலர் கடத்தி சென்றனர். கடத்தப்பட்ட கல்லூரி மாணவியை போலீசார் திண்டுக்கல்லில் மீட்டனர். கடத்தலில் ஈடுபட்டபழனிச்சாமி, கருப்புசாமி, சரவணன், கலா, நந்தகோபால் ஆகிய 5 பேரை குஜிலியம்பாறை தாலுகா கோடாங்கிபட்டியில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த போது தனிப்படை போலீசார் கைது செய்தனர்.