by Vignesh perumal on | 2025-03-12 09:40 AM
இந்தியாவில் பரதமராக தேர்ந்தெடுக்க பட்ட பின் பிரதமர் மோடி அவர்கள் பல்வேறு நாடுகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவ்வேளையில், இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு தான் மொரிஷியஸ்.
அந்த நாட்டின் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் அழைப்பு விடுத்ததன்பேரில் அந்நாட்டின் 57-ஆவது தேசிய நாளில் சிறப்பு விருந்தினராகப் கலந்து கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் அரசுமுறை பயணமாக மொரிஷியஸ் பயணம் மேற்கொண்டார். அந்நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடிக்கு பிரமாண்ட வரவேற்பளிக்கப்பட்டது.
மேலும் அந்நாட்டு குடியரசுத் தலைவர் தரம்பீர் கோகூல் மற்றும் அவரின் மனைவி பிருந்தா கோகூல் ஆகியோரைச் சந்தித்த பிரதமர் மோடி அவர்களுக்கு கும்பமேளா திரிவேணி சங்கமத்தின் நீரை பரிசளித்தார்.
அதுமட்டுமின்றி,முதல் முறையாக மோரீஷஸ் சென்ற பிரதமர் மோடிக்கு இந்தியப் பெருங்கடலின் ஆர்டர் ஆப் தி ஸ்டார் அண்ட் கீ ஆப் தி ஆர்டர் ஆப் தி கிராண்ட் கமாண்டர் ஆகிய நாட்டின் உயரிய விருதுகள் வழங்கி பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்விருது பெறும் முதல் இந்தியர் என்ற சிறப்பையும் பிரதமர் மோடி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இது பிரதமர் மோடி பெறும் 21 வது சர்வதேச விருது என்பது கவனிக்கத்தக்கது.
செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.