by admin on | 2025-03-11 09:20 PM
நாடாளுமன்றத்தில் தற்போது நடைபெற்று வரும் கூட்டத்தொடரில், அதாவது, திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் நேற்று, தமிழ்நாடு மாநிலத்திற்கு மைய அரசு அளிக்க வேண்டிய கல்வி சார் நிதி குறித்து வினா எழுப்பி மைய அரசை மிகவும் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
இச்செயலுக்கு மைய அரசின் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், திராவிட முன்னேற்றக் கழக எம்.பிக்களை "நாகரிகமற்றவர்கள்" என்று தெரிவித்துள்ளார். இச்செயலுக்கு திமுக உள்ளிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற கட்சி எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டுள்ளனர்.
இச்செயலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் நேற்றே கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருந்தனர்.
இதனைத்தொடர்ந்து, இன்று மைய அரசின் கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “திமுக எம்பி கனிமொழி எனக்கு சகோதரி; நான் தவறாக பேசி இருந்தால் மன்னிப்புக் கேட்கிறேன், நான் கூறிய தனது சொற்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார்.
செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்