by admin on | 2025-03-11 08:39 PM
உலகளவில் மென்பொருள் மற்றும் வன்பொருள் தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் அமெரிக்காவும் சீனாவும் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது. அதாவது, சீனா அமெரிக்காவின் தொழில் நுட்பங்களுக்குப் இணையாக அல்லது அதைவிட நன்றாகவே பல கண்டுபிடிப்புகளை உருவாக்கி உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வருவதை நாம் அறிந்ததே. இதற்கு எடுத்துக்காட்டாக, இரண்டு மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவின் "Chat GPT"-இன் மதிப்பை பின்னுக்கு தள்ளி சீனாவின் "DeepSeek AI" முதல் இடத்தை தக்கவைத்து சாதனை படைத்துள்ளது.
இச்சூழலில் 'google super' கணினியைவிட, அதிக சிறப்பம்சங்கள் கொண்டு மிகவும் சிறப்பாகச் செயல்படும் சிறப்பு வாய்ந்த கணினியை சீனா உருவாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், சீனா அறிமுகம் செய்துள்ள ’ஜுச்சோங்ஷி - 3’ என்ற குவாண்டம் கணினி, சூப்பர் கணினிகளின் தொழில்நுட்பத் துறையின் மாபெரும் சாதனையாக கருதப்படுகிறது.
சீன அறிவியல் நிறுவனத்தின் கீழ் செயல்படும் சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (USTC) ஆராய்ச்சிக் குழு, 105 க்யூபிட் மற்றும் 182 கப்ளர் ப்ராஸசரை பயன்படுத்தி ’ஜுச்சோங்ஷி - 3’ என்ற குவாண்டம் கணினியைக் தயாரித்துள்ளது. ஆச்சரியப்படுத்தும் வேகத்தில் செயல்படும் ’ஜுச்சோங்ஷி - 3’, நிகழ்காலத்தில் மிகவும் வலிமை மிக்க சூப்பர் கணினியைவிட 10 ஆயிரம் டிரில்லியன் (10 பவர் 15) வேகத்திலும், கூகுள் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட குவாண்டம் கணினியைவிட 10 லட்சம் மடங்கு வேகமாக செயல்படக்கூடியதாக உள்ளது.
செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.