by Muthukamatchi on | 2025-03-11 04:01 PM
திண்டுக்கல் மாவட்டத்தில் 11 சார்பு ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவிட்டுள்ளார். திண்டுக்கல் தெற்கு நகர்புறம் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் எஸ்.முனியாண்டி தாடிக்கொம்பு பகுதிக்கும், தாடிக்கொம்பு காவல்நிலைய சார்பு ஆய்வாளர் சி.பிரபாகரன் திண்டுக்கல் தெற்கு நகர்புறத்திற்கும், கூம்பூர் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் எ.விஜயபாண்டியன் செம்பட்டி காவல்நிலைய சார்பு ஆய்வாளராகவும், எரியோடு காவல்நிலைய சார்பு ஆய்வாளர் எஸ்.ஆரோக்கிய ரோஜர் மில்டன் ஒட்டன்சத்திரம் காவல்நிலைய சார்பு ஆய்வாளராகவும், ஒட்டன்சத்திரம் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் எஸ்.சவடமுத்து எரியோடு காவல்நிலைய சார்பு ஆய்வாளராகவும், இடையக்கோட்டை காவல்நிலைய சார்பு ஆய்வாளராக இருந்து எஸ்.சுரேஷ்பாபு கூம்பூர் காவல்நிலைய சார்பு ஆய்வாளராகவும், செம்பட்டி காவல்நிலைய சார்பு ஆய்வாளராக இருந்த ஆர்.ராமபாண்டியன் விளாம்பட்டி காவல்நிலைய சார்பு ஆய்வாளராகவும், ரெட்டியார்சத்திரம் காவல்நிலைய சார்பு ஆய்வாளராக இருந்த எம்.காதர் மைதீன் திண்டுக்கல் மேற்கு நகர்புறம் காவல்நிலைய சார்பு ஆய்வாளராகவும், விளாம்பட்டிகாவல்நிலைய சார்பு ஆய்வாளராக இருந்த கே.நீலமேகம் இடையக்கோட்டை காவல்நிலைய சார்பு ஆய்வாளராகவும், PEWதிண்டுக்கல் காவல்நிலைய சார்பு ஆய்வாளராக இருந்த கே.ஜெய்கணேஷ் ரெட்டியார்சத்திரம் காவல்நிலைய சார்பு ஆய்வாளராகவும், திண்டுக்கல் மேற்கு நகர்புறம் காவல்நிலைய சார்பு ஆய்வாளராக இருந்த ஜே.மலைச்சாமி PEW திண்டுக்கல் காவல்நிலைய சார்பு ஆய்வாளராகவும் இடம் மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!