by Muthukamatchi on | 2025-03-10 09:37 PM
முன்விரோதம் காரணமாக புதுச்சேரியைச் சேர்ந்த ரவுடி ஐயப்பன் (48) திருவண்ணாமலையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.திருவண்ணாமலை அடுத்த நீலந்தாங்கல் ஏரி கோடி பகுதியில் ஐயப்பன் வெட்டிக் கொலையானார். புதுச்சேரி காவல்நிலையத்தில் ஐயப்பன் மீது கொலை, கொள்ளை, வெடிகுண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. புதுச்சேரி போலீசாரின் கெடுபிடியால் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக தமிழ்நாட்டில் பதுங்கி இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.