by admin on | 2025-03-08 07:45 PM
தேனியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் 620 மகளிர்களுக்கு ரூ.47.44 கோடி மதிப்பீட்டில் வங்கி கடனுதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், தேனி பாராளுமன்ற உறுப்பினர் திரு.தங்க தமிழ் செல்வன் அவர்கள், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆ.மகாராஜன் அவர்கள், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.எஸ்.சரவணக்குமார் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
உலக மகளிர் தினவிழாவை முன்னிட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மகளிர் குழுவினர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசு பெண்கள் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்றி, அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றி வருகிறது.
பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், தனிநபர் வருமானத்தை பெருக்கும் நோக்கத்திலும், கிராம அளவில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. 1989 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் முதன் முறையாக “தர்மபுரி மாவட்டத்தில்” முன்னோடித் திட்டமாகத் தொடங்கப்பட்டது.
தற்போது மாநிலத்தில் உள்ள ஏழை, எளிய மற்றும் நலிவுற்ற மகளிரை இணைத்து, ஒரு மாபெரும் சக்தி வாய்ந்த இயக்கமாக தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இயங்கி வருகிறது. இலாபம் தரக்கூடிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துவதன் மூலம் குடும்ப வருமானத்தை உயர்த்தி, வறுமையிலிருந்து விடுபடச் செய்து, வாழ்க்கை தரத்தை உயர்த்த முடிகிறது. இதன்மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களில் உள்ள பெண்களின் தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளது.
இவ்விழாவில் ஊரக / நகர்ப்புற பகுதியைச் சார்ந்த 436 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் ரூ.45.22 கோடி, மக்கள் அமைப்புக்கள் மூலம் 76 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.60.00 இலட்சம் கடனுதவியும், சிறப்பாக செயல்பட்ட ஊராட்சி / பகுதி அளவிலான குழு கூட்டமைப்பு, சிறந்த சுய உதவிக்குழுக்களுக்கு மாவட்ட அளவிலான மணிமேகலை விருது, சான்றிதழ் மற்றும் தொகை ரூ.3.50 இலட்சம் 7 மக்களமைப்புகளுக்கும், 38 நபர்களுக்கு ரூ.17.30 இலட்சம் நுண்நிறுவனக்கடன், 62 நபர்களுக்கு திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் 8 கிராம் தங்க நாணயம் , 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10.20 இலட்சம் மதிப்பீட்டில், 10 இணைப்பு சக்கரங்கள் பொறுத்தப்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் 4 மாற்றுத்திறனாளி நபர்களுக்கு ரூ.65.00 இலட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் போன் ஆக மொத்தம் 620 பயனாளிகளுக்கு ரூ.47.44 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பயன்பெற்ற தேவதானப்பட்டியைச் சேர்ந்த சிவன் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் திருமதி.இராஜலட்சுமி அவர்கள் தெரிவித்ததாவது:-
இன்றைய தினம் மகளிர் சுய உதவிக்குழுவினர்களுக்கு கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அனைவரும் பயன்பெற்றுள்ளனர். அனைவரையும் சமமாக எண்ணி அனைவரின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் அரசாக தமிழ்நாடு அரசு திகழ்ந்து வருகிறது. எண்ணற்ற மகளிர் சுய உதவிக்குழுவினர்களுக்கு வங்கிக்கடன் உதவி வழங்கி, பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் உயரிய எண்ணத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எங்கள் மகளிர் குழுவின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.அபிதா ஹனீப், திட்ட இயக்குநர்(மகளிர் திட்டம்) திருமதி.சந்திரா, நகர்மன்ற தலைவர்கள் திருமதி.ரேணுப்பிரியா பாலமுருகன்(தேனி அல்லிநகரம் நகராட்சி), திருமதி.சுனிதா சிவக்குமார்(பெரியகுளம்), திருமதி.இராஜராஜேஸ்வரி சங்கர் (போடிநாயக்கனூர்), திருமதி.அய்யம்மாள்ராமு(சின்னமனூர்), திருமதி வனிதா நெப்போலியன்(கம்பம்), தேனி அல்லிநகரம் நகராட்சி துணைத்தலைவர் திரு.செல்வம், திட்டக்குழு உறுப்பினர் திரு.நாராயணபாண்டி, பேரூராட்சித் தலைவர்கள் திருமதி.கீதாசசி (வீரபாண்டி) , திரு.கவியரசு(பூதிப்புரம்), மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.விஜயசேகர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.காமாட்சி, மாவட்ட சமூகநல அலுவலர் திருமதி.சியமளாதேவி மற்றும் உதவி திட்ட அலுவலர்கள் திருமதி.கங்கா கௌரி, திருமதி.விஜயசங்கரி, திரு.பாலன், திரு.ஜெய்கணேஷ் மற்றும் அலுவலர்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
போலீசார் அலட்சியம் - உயர் நீதிமன்றம் அதிருப்தி ! போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு !!
முறைகேடு புகார் எதிரொலி ! மாநகராட்சி துணை ஆணையர் அதிரடி சஸ்பெண்ட் !!
திண்டுக்கல்லில் பரபரப்பு...! கொலை வழக்கில் சாட்சி சொல்வதில் மோதல்...! 2 பேர் கைது...!
திக் திக் நிமிடங்கள்...! தகராறில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை..! பெரும் சோகம்...!
ஒரே நேரத்தில்...! டிஎஸ்பி உள்ளிட்ட 11 போலீசாருக்கு சிபிசிஐடி 'சம்மன்'...!