by Muthukamatchi on | 2025-03-08 06:37 PM
மாநிலம் முழுவதும் டூ வீலர் மற்றும் சிலிண்டர்கள் திருட்டு என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திருட்டு தொடர்வாக போலீசார் வழக்கு பதிவு செய்வதோடு நிறுத்திக் கொள்கின்றனர் மேல் விசாரணை மேற்கொள்வதில்லை. ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தில் அப்படி அல்ல திருட்டு குற்றவாளிகளை தேடி தேடி பிடித்து சிறைக்குத் தள்ளுவது முதன்மை காட்டி வருகின்றனர்.பழனி அருகே இருசக்கர வாகனம், கேஸ் சிலிண்டர் திருடிய பலே திருடனை கைது செய்து 8 இருசக்கர வாகனம், 10 சிலிண்டர்கள் பறிமுதல் செய்தனர். செயல் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் பழனி, பழனி புறநகர், சத்திரப்பட்டி, சாமிநாதபுரம், கீரனூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனம் மற்றும் கேஸ் சிலிண்டர்கள் திருடு போனது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டதுஇதுகுறித்து எஸ்.பி. பிரதீப் உத்தரவின் பேரில் DSP. தனஞ்செயன் மேற்பார்வையில் சத்திரப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் கவிதா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட பழனி, கலிக்கநாயக்கன்பட்டியை சேர்ந்த பிரவீன்குமார் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 8 இருசக்கர வாகனங்கள், 10 கேஸ் சிலிண்டர்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
படம் செய்தி மோகன் கணேஷ் திண்டுக்கல்
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!