by Muthukamatchi on | 2025-03-08 03:37 PM
நடப்பு மாதத்தில் துவங்க உள்ள பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறுகின்ற பொழுது மாநில முழுவதும் அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக கிராம மக்கள் தங்கள் பகுதியில் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்சினைகளை மையப்படுத்தி ஆர்ப்பாட்டம் போராட்டம் நடத்தி வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில்வருகிற மார்ச் 14 ல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது கூட்டத் தொடரில் பட்ஜெட்டில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதிக்கு அரசு கல்லூரி அமைப்பதற்கு அறிவிப்பு வெளியிடப்படுமா ? என்று கூறிநத்தம் பகுதி மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் சார்பாக நீண்டநெடிய கோரிக்கையை நிறைவேற்ற கோரிஇந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில்நத்தம் தொகுதி முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது .