by Muthukamatchi on | 2025-03-07 06:55 PM
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள எஸ்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரது மனைவி கமலம். 82 வயதான மூதாட்டி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்ட நிலையில், சிகிச்சைக்கு கொண்டு வரும் வழியிலேயே மூதாட்டி உயிரிழந்தார்.இதையடுத்து அவசர சிகிச்சை பிரிவு 802 வது அறையில் பரிசோதித்த மருத்துவர்கள், மூதாட்டி உயிரிழந்ததாக தெரிவித்தனர் .அந்த அறையில் வைக்கப்பட்டிருந்த மூதாட்டியின் உடலில் இருந்த 4 பவுன் தங்க செயின் திருடு போனது.இதையடுத்து உடலில் இருந்த செயின் காணாமல் போனதையறிந்து அதிர்ச்சி அடைந்த கமலம் என்பவரின் மருமகன் ரவிச்சந்திரன் க.விலக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், காவல்துறையினர் சிகிச்சை அறையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். சிசிடிவி காட்சியில் பெண் ஒருவர், மூதாட்டியின் இறந்த உடலில் இருந்து தங்கசெயினை திருடி சென்றது தெளிவாக தெரிந்தது .இதையடுத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட அந்த பெண் யார் என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில்,உறவினரின் சிகிச்சைக்காக வந்த, தேனி வளையப்பட்டி பகுதியை சேர்ந்த நந்தினி என்பது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாகி இருந்த நந்தினியை க.விலக்கு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர் .இறந்த மூதாட்டியின் உடலில் இருந்து தங்கசெயினை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சிகிச்சை அறையில் இருந்தே துணிகரமாக திருடிசென்று, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நிருபர் பிரவின் தேனி.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!