வடமதுரையில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 17 ஆண்டுகள் சிறை, 3 ஆயிரம் அபராதம் விதிப்பு.திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2020-ம் ஆண்டு ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக வேடசந்தூர், தட்டாரப்பட்டி சேர்ந்த கணேசன் மகன் பாலசுப்பிரமணி(37) என்பவரை வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மற்றும் அரசு வழக்கறிஞர் ஜோதி ஆகியோரின் சீரிய முயற்சியால் இன்று மகிளா நீதிமன்ற நீதிபதி சரண் அவர்கள் பாலசுப்பிரமணிக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.3000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.