பெங்களூரில் இருந்து கேரளாவிற்கு மெத்தபட்டமைன் கடத்தல் ஒருவர் கைது......!!!!!!
by Muthukamatchi on |
2025-03-04 10:31 PM
Share:
Link copied to clipboard!
நீலகிரி மாவட்டம் கூடலூர் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது தலைமையிலான போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் மூன்றாம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
தற்போது பெங்களூர் நகரத்திலிருந்து கேரளாவிற்கு கேரள மாநில விரைவு பேருந்தில் 600 கிராம் மெத்தபட்ட மெயின் என்னும் போதை பொருளை கடத்தி வந்த கேரளாவை சேர்ந்த முகமது சபீர் என்பவர் போலீசார் கைது செய்தனர்.
நீலகிரி மாவட்ட கூடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் திரு வசந்தகுமார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு முன்மொழிவு செய்ததன் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையின் பேரில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் மேற்படி முகமது சபீர் என்பவரை தடுப்பு காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார்.