by Muthukamatchi on | 2025-03-04 06:36 PM
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு தொடர்பான மருத்துவத் துறையின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி. நட்டாவிடம் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஒப்படைத்தார்.முக்கிய கோரிக்கைகள் :தமிழ்நாடு சட்டப் பேரவையால் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுடன் ஒன்றிய அரசக்கு அனுப்பப்பட்டுள்ள நீட் நடைமுறைக்கு எதிரான சட்ட முன்வடிவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத்தரக் கோருதல். கோவையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க அனுமதி கோருதல்.தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் நிறுவுதல்.தமிழ்நாட்டில் 24 நகர்ப்புற மற்றும் 26 ஊரக ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 500 துணை சுகாதார நிலையங்களுக்கு அனுமதி வழங்குதல்தேசிய மருத்துவ ஆணையத்தின் தேசிய வெளியேறும் தேர்வு விதிமுறைகள், 2023 மீதான ஆட்சேபணை தெரிவித்தல். பொது கலந்தாய்வுத் தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையத்தின் பட்டப்படிப்பு மருத்துவக் கல்வி விதிமுறைகள் 2023க்கு ஆட்சேபணை தெரிவித்தல்.தேசிய மருத்துவ ஆணையத்தின். "புதிய மருத்துவ நிறுவனங்களை நிறுவுதல்₹447.94 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாட்டில் புற்றுநோய் பராமரிப்பு சிகிச்சை மற்றும் சேவைகளை மேம்படுத்துதல். 22 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு ₹603.45 கோடி மதிப்பீட்டில் நரம்பியல் அறுவை சிகிச்சைப் பிரிவுகளை மேம்படுத்தி திறன் ஆய்வகங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்ட மனுவை தமிழக அமைச்சர் மா சுப்பிரமணியன் மத்திய அமைச்சர் ஜே பி நட்டாவிடம் வழங்கினார்
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!