| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Tamilnadu

அரசுப் பள்ளியில் 113 வது ஆண்டு விழா......!!!!

by admin on | 2025-03-02 04:44 PM

Share:


அரசுப் பள்ளியில் 113 வது ஆண்டு விழா......!!!!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சண்முக சுந்தரபுரம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 100 ஆண்டுகள் நிறைவு பெற்று, தற்போது 113 ஆவது ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்ற இந்த விழாவில், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராஜ் ,பள்ளி மேலாண்மை குழு தலைவர் நந்தினி, முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் போலப்பன், துணைத் தலைவர் அய்யணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .ஆசிரியர் நிறைமதி வரவேற்று பேசினார்.தலைமையாசிரியர் சுகுணா பள்ளி ஆண்டு அறிக்கை வாசித்தார் .சிறப்புஅழைப்பாளர்களாக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராஜாராம் ,திமுக மாவட்ட விளையாட்டு அணி துணை அமைப்பாளர் சேது ராஜா, ஆண்டிபட்டி திமுக நகரச் செயலாளர் பூஞ்சோலை சரவணன் ஆகியோர் கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கியும், ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கியும் விழா சிறப்புரையாற்றினார்கள்.விழாவில் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது .ஆசிரியர் மேனகா நன்றி கூறினார் .விழா ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.போட்டோ செய்தி பிரவின் ஆண்டிபட்டி தேனி.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment