by admin on | 2025-03-02 03:11 PM
கோவை மயில் மார்க் சம்பா ரவை நிறுவன பங்குதாரர்கள் செந்தில் குமார், பாலசுப்பிரமணியன், பொன்முருகன், தமிழக வியாபாரிகள் சம்மேளன ரங்கே கவுடர் வீதி தலைவர் மணி ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.அப்போது அவர்கள் கூறும் போது, கோவை ரங்கேகவுடர் வீதியில் 60 வருடபாரம்பரியமிக்க ஒரு நிறுவனமாக எங்களுடைய மயில் மார்க் சம்பா ரவை நிறுவனம் செயல்பட்டு வருகிறது.சம்பா ரவை என்பதுதமிழக மக்களின்அன்றாட உணவு முறையில் உள்ள ஒரு விஷயம். இதில் எங்கள் மயில் மார்க் சம்பாரவையின் நற்பெயரை கெடுக்க வேண்டும் என்றநோக்கத்தில் மயில் மார்க் சம்பா ரவைசாப்பிடும் மக்களிடம் பீதியைகிளப்பி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற நோக்கத்தில் தான் தொடர் புகார்களை நாங்கள்அளித்து நடவடிக்கை எடுக்கவலியுறுத்திவருகிறோம்.மயில் மார்க் சம்பா ரவைசாப்பிட்டதால் உடல் நலக்குறைவு ஏற்பட்டது என ஒருபொய்யான வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவை தொப்பம்பட்டியை சேர்ந்த ரவிகாந்த் என்பவர் கடந்த ஆண்டு தாக்கல் செய்திருந்தார் .இதைதொடர்ந்து உணவு பாதுகாப்பு துறைஅதிகாரிகள்மயில்மார்க்சம்பா ரவை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் சம்பா ரவைதயாரிப்புகளை உணவு பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். அதில் மயில் மார்க் சம்பா ரவையில் எந்தவிதமான வேதிப்பொருள்,பூச்சிக்கொல்லி மருந்தோ கலக்கவில்லை என சோதனை அறிக்கை வந்தது. இந்த அறிக்கையை உணவுபாதுகாப்புத் துறை அதிகாரிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர் .மேலும்பொய்யான வழக்கை தாக்கல் செய்த ரவிகாந்த் என்பவரினா முகவரிக்கு விசாரணைக்கு நேரில் வருமாறுஉணவு பாதுகாப்புத் துறைஅதிகாரிகள்பலமுறை சம்மன் அனுப்பினர். ஆனால்ரவிகாந்த் நேரில் ஆஜராகவில்லை. கடந்த மாதம் 7 ஆம் தேதிசென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நீதிபதி பரதசக்கரவர்த்திமுன்னிலையில்வந்தது .வழக்கைவிசாரித்த நீதிபதி மயில் மார்க் சம்பா ரவை நிறுவனத்தின் மீதுபோடப்பட்ட பொய்வழக்கை தள்ளுபடி செய்துஉத்தரவிட்டுள்ளார். உத்தரவில் மயில் மார்க் சம்பா ரவை மீது போடப்பட்டது ஒருபுனையப்பட்ட பொய் வழக்குஎன்றும்உத்தரவிட்டுள்ளார்.மேலும் வழக்குதாக்கல் செய்த ரவி காந்த் ஒரு தனியார்ஆய்வகஅதிகாரியிடம் மிரட்டி பொய்யான மதிப்பீட்டை பெற்று அதை கோர்ட்டில் தாக்கல்செய்து உள்ளார். இதற்கு பின்புலமாக கோவையில் உள்ளதனியார் நிறுவன உரிமையாளர் உள்ளார்என்பது நாங்கள் பெற்றதகவல்படிதெரியவந்தது. மேலும் மயில் மார்க் சம்பா ரவை குறித்து கடந்த மாதத்தில் அவதூறு வீடியோவை வாட்ஸ்அப்பில் சிலர்பரப்பினர். இதுகுறித்து கோவைமாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார்அளித்தோம். இந்த வீடியோவை ஏற்கனவே வழக்கு தொடர்ந்த ரவிகாந்த் தான் பரப்பி வருகிறார் என்று புகார் அளித்து இருந்தோம். இது குறித்து விசாரணைக்கு நேரில் கடந்த 22 ஆம் தேதிஆஜராகுமாறு ரவி காந்த்திற்கு கோவை கடை வீதிபோலீசாரும், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாரும் சம்மன்அனுப்பி இருந்தனர். ஆனால் அன்றைய தேதியில் ரவி காந்த் நேரில் வந்துவிட்டு விசாரணைக்குஆஜராகாமல்செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தப்பி சென்றார். அவனது வழக்கறிஞர் எனகூறிகொண்டு வந்த நெடுஞ்செழியன் என்பவர் மட்டும்இரண்டு போலீஸ் ஸ்டேஷனில் சிறிது நேரம் இருந்துவிட்டு ரவி காந்த்தை அழைத்து கொண்டு வருவதாக கூறிவிட்டு சென்றஅவரும் இதுவரை வரவில்லை. இதிலிருந்து அவதூறு வீடியோவை பரவவிட்டது ரவி காந்த் என்பது தெளிவாக தெரிகிறது. இவரது பின்புலமாக செயல்பட்டவர் யார் என்பது விரைவில் வெளிஉலகிற்குவந்துவிடும். அதனால் தான் போலீஸ் விசாரணைக்குஆஜராகாமல்செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தப்பி சென்றுள்ளார். ரவிகாந்த் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுமீண்டும் கோவை மாநகரபோலீஸ்கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளோம்.பொதுமக்களுக்கு நாங்கள் சொல்வது , தரத்தைமட்டுமேகுறிக்கோளாககொண்டு செயல்படும் எங்கள் நிறுவன தயாரிப்புகள் அனைத்துமே அனைத்து வயதினரும் சாப்பிடும் விதத்தில் மிகவும்தரமான முறையில் தயாரிக்கப்படுகிறதுஎன்பதை மீண்டும் அழுத்தமாக சொல்லி கொள்கிறோம். சம்பா ரவை என்பதுதமிழக மக்களின் அன்றாடஉணவு முறையில் உள்ள ஒரு விஷயம். இதில் எங்கள் பிராண்ட்பெயரை கெடுக்க வேண்டும் என்றநோக்கத்தில்மக்களிடம் சம்பா ரவை சாப்பிடும் மக்களிடம் பீதியைகிளப்பி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற நோக்கத்தில் தான் தொடர் புகார்களை நாங்கள் அளித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிறோம் என்றுதெரிவித்தனர்.உடன் தமிழக வியாபாரிகள் சம்மேளன கடைவீதி செயலாளர் தியாகராஜன், மாயா சன்ஸ் உரிமையாளர் நரேஷ், பரமானந்தம் பிரதர்ஸ்நிறுவனஉரிமையாளர் அருள் ஜேக்கப் ஆகியோர் உடன்இருந்தனர்.
நிருபர் : N. சதீஷ்குமார், பெரியகுளம், தேனி.
பல்கலைக்கழக அளவிலான கைப்பந்து போட்டிகள் இரண்டாம் இடம் பெற்ற திரவியம் கல்லூரி மாணவர்கள் ...!!!
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்...!!! கலெக்டர் ரஞ்சித் சிங் நலத்திட்ட உதவிகள் வழங்கல்...!!!
கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது...!!!
திமுக நகராட்சி தலைவரின் குடோனில் அமலாக்கத்துறை சோதனை....!!!
தீப்பிடித்த காரில் உயிருடன் எரிந்து...! ஆய்வாளர் சலீமத் உயிரிழப்பு..! பெரும் பரபரப்பு...!