by admin on | 2025-03-02 02:14 PM
ஆண்டிபட்டி தி லிட்டில் பிளவர் பள்ளி 20 ஆவது ஆண்டு விழா. புதுச்சேரி அரசு செயலர் பங்கேற்பு.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள தி லிட்டில்பிளவர் பள்ளியின் இருபதாவது ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் ஹென்றி அருளானந்தம் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக புதுச்சேரி சமூக நலம் ,பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலம், பொருளாதாரம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளின் அரசு செயலர் சுந்தரேசன் கலந்துகொண்டு, பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி, விழா சிறப்புரையாற்றினார். பள்ளியின் நிர்வாகி தமயந்தி முன்னிலை வகித்தார். முதல்வர் உமா மகேஸ்வரி வரவேற்று பேசி ஆண்டு அறிக்கை வாசித்தார்.
பள்ளியின் ஆலோசகர் பிரைசலின் மாணவர்களின்அணிவகுப்பு மரியாதை பற்றிய கருத்துக்களை எடுத்துரைத்தார் .விழாவில் ஆண்டிபட்டி பேரூராட்சி தலைவர்பொன் சந்திரகலா, பள்ளியின் செயலர் மாத்யூஜோயல் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். விழாவில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் சாதனை வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது .அதனை தொடர்ந்து வண்ண ,வண்ண உடை அணிந்து பள்ளி மாணவ மாணவர்களின்ஆடல் ,பாடல் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது .மேலும் ஆங்கிலம் மற்றும் தமிழில் மாணவர்கள் நடித்த நாடகங்கள் இலக்கிய தரம் வாய்ந்ததாக இருந்தது.விழாவில் கலையாசிரியர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்களை கௌரவிக்கும் வகையில் கேடயங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளை ஆசிரியர்கள் ராகினி, சேவியோ, மரியா, பிரகன்சியா ஆகியோர் தொகுத்து வழங்க, விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் பூமா ,கவிதா ,ராகினி, பாண்டிச்செல்வி ,திவ்யா உள்ளிட்ட ஆசிரியர்கள் செய்திருந்தனர். விழாவில் மாணவ மாணவர்கள் பெற்றோர்கள் பொதுமக்கள் ஏராளமாக கலந்து கொண்டனர்.
பல்கலைக்கழக அளவிலான கைப்பந்து போட்டிகள் இரண்டாம் இடம் பெற்ற திரவியம் கல்லூரி மாணவர்கள் ...!!!
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்...!!! கலெக்டர் ரஞ்சித் சிங் நலத்திட்ட உதவிகள் வழங்கல்...!!!
கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது...!!!
திமுக நகராட்சி தலைவரின் குடோனில் அமலாக்கத்துறை சோதனை....!!!
தீப்பிடித்த காரில் உயிருடன் எரிந்து...! ஆய்வாளர் சலீமத் உயிரிழப்பு..! பெரும் பரபரப்பு...!