by admin on | 2025-03-01 11:02 PM
ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்தபோது மிஷினில் இருந்த 8500/- ரூபாயை காவல்துறையிடம் ஒப்படைத்த வாலிபர்..???
சம்பந்தப்பட்ட வங்கி ஏடிஎம் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு பதாகை வைக்க வேண்டும்
உத்தமபாளையம் இந்திரா நகரை சேர்ந்தவர் காலித் அகமது. இவர் ஆயத்த ஆடைகள் வியாபாரம் செய்து வருகிறார். தொழில் விஷயமாக சின்னமனூருக்கு வந்திருந்த நிலையில் சின்னமனூர் ரவுண்டானா அருகே உள்ள கனரா பேங்க் ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காக உள்ளே சென்றபோது ஏடிஎம் மிஷினில் 500 ரூபாய் நோட்டுக்களாக வெளியே வந்த நிலையில் இருந்தது. இதைக் கண்டு அவர் அதை எடுத்து எண்ணிய போது 8,500 ரூபாய் இருந்தது தெரியவந்தது. அருகில் யாரும் இல்லாததால் அந்தப் பணத்தை சின்னமனூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட ஏடிஎம் சென்டர் அருகே கடை வைத்திருப்பவர்கள் இந்த மிஷினில் ஏடிஎம் கார்டை சொருகி பின்பு பிராசஸ் முடிந்து கார்டை எடுத்த பிறகுதான் பணம் வரும். ஆனால் சிலர் அறியாது பணம் வரவில்லை என்று நினைத்து ஏடிஎம் கார்டை மட்டும் எடுத்து விட்டு சென்று விடுகின்றனர். அவர்கள் சென்ற பின்பு இதுபோல் அடிக்கடி பணம் வெளியே வந்து சம்பந்தப்பட்ட நபர்களிடமும், வாங்கியிலும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால் இவரைப்போல் நேர்மையாக எல்லோரும் நடப்பார்கள் என்று உறுதி கூற முடியாது. எனவே இது குறித்த விழிப்புணர்வை சம்பந்தப்பட்ட வங்கியின் நிர்வாகம் அந்த ஏடிஎம் சென்டரில் அனைவரும் தெரியும் வண்ணம் அறிவிப்பு பதாகை வைக்க வேண்டும் என்று கூறினர்.