| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Tamilnadu

அரசு போக்குவரத்து கழகத்தில் இப்படியுமா...?? தில்லுமுல்லு .....??? முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா???

by admin on | 2025-02-28 08:24 PM

Share:


அரசு போக்குவரத்து கழகத்தில் இப்படியுமா...?? தில்லுமுல்லு .....???   முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா???

திண்டுக்கல் மண்டலம் பெரியகுளம் அரசு போக்குவரத்து கழக கிளையில் CLR ஆக நியமனம் செய்யப்பட்டு பணி செய்யக்கூடிய ஓட்டுநர்கள், நடத்துனர்களுக்கு 40 நாட்கள் வேலை கொடுக்க வேண்டும். அதன் பிறகு 15 நாட்கள் கழித்து அவர்களுக்கு மீண்டும் பணி வழங்க அரசு வழிகாட்டுதல் நெறிமுறை 

உள்ளது . ஆனால் பெரியகுளம் அரசு போக்குவரத்து கழக கிளையில் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடிக்காமல் ஓரிரு நாட்களிலேயே மீண்டும் பணி வழங்கப்படுகிறது. இதன் மூலம் அரசின் வழிகாட்டுதல் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது.தற்போதைய கிளை மேலாளரின் ஆதரவோடு டிராபிக் இன் சார்சார்ஜ் ஆக உள்ளவர் பல வருடங்களாக இப்பணியில் இருப்பதால் புதிதாக வருகின்ற மேலாளர்களை தனது கைக்குள் வைத்துக் கொண்டு இது போன்ற தில்லுமுல்லு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார் 

மேலும் CLR ஆகநியமிக்கப்படும் ஓட்டுநர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக வேறு ஒரு ஓட்டுநர், நடத்துனர்கள் பெயர்களில் கணக்கு காண்பிக்கப்பட்டு பணம் எடுக்கப்படுகிறது.இதுபோல் CLRஓட்டுநர்நடத்துனர் பணி செல்லும் பஸ்களில் வருவாய் குறைவாக வரும் போது நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் வேறுவண்டிகளில் வேறு ஓட்டுநர், நடத்துனர்கள் பெயர்களில் பணம் எடுக்கப்பட்டு வருகிறது . 

இந்த தில்லு முல்லு அனைத்தும் இங்குள்ள கிளை மேலாளருக்கு நன்றாகவே தெரியும். 

 இதில் ஏதாவது பிரச்சனை என்றால் அன்று பணி பார்க்கும் தொழிலாளர்கள் மீது புகார் எழுதுவது என தவறுகள் நடைபெற்று 

வருகிறது. 

எனவே போக்குவரத்து கழக திண்டுக்கல் மண்டல ஜி எம் அவர்கள் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment