| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் அரசியல்

விமான நிலைய விரிவாக்க பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். சு. வெங்கடேசன் எம். பி., வேண்டுகோள்.!!!!!

by admin on | 2025-02-28 06:19 PM

Share:


விமான நிலைய விரிவாக்க பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.  சு. வெங்கடேசன் எம். பி., வேண்டுகோள்.!!!!!

முதல்வரும் நீர்வளத்துறை அமைச்சரும் வருகிற நிதி ஆண்டிலேயே இந்த 90 கோடி ஒதுக்கினால் தான் தான் விமானநிலைய விரிவாக்க பணியை வேகப்படுத்த முடியும். -எம்பி சு.வெங்கடேசன் மதுரை விமான நிலையத்தில் பேட்டியளித்தார்..

அடுத்த ஆறு மாதகாலத்திற்குள் பாஷா ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது - சு.வெ*

மதுரைவிமான நிலைய ஆலோசனைக் கூட்டம் மதுரை விமான நிலைய இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், மதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மதுரை மாநகர் காவல் ஆணையர் லோகநாதன் இண்டிகோ,ஏர் இந்தியா, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்த செய்தியாளர்களை சந்தித்த விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் கூறுகையில்:*

மதுரை விமான நிலையத்தின் தேவை மற்றும் தீர்த்து வைக்கப்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டது. 24 மணி நேர சேவை முக்கிய முன்னேற்றமாகபார்க்கப்படுகிறது. இரவு சேவையை விமான நிறுவனங்கள் துவங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். சிங்கப்பூர் ஏர் இந்தியா விமானசேவை குறித்து அதன் சிஇஓவை சந்திக்க உள்ளோம். 

சின்ன உடைப்பு நிலம் கையகப்படுத்தும் விவகாரம் குறித்த கேள்விக்கு:

சின்ன உடைப்பு விவகாரம் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகிறது விரைவில் நீதி கிடைக்க வேண்டும். மக்களின் பிரச்சினையாக இருந்தாலும்  நீதிமன்றம் எடுக்கும் முடிவை விமான நிலையத்தின் வளர்ச்சிக்காக பார்க்க வேண்டும்.

சின்ன உடைப்பு விவகாரத்தில் மாவட்ட ஆட்சியரும் அமைச்சரும் பணத்தை கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு:

இது நீதிமன்றத்திற்கு உட்பட்ட பிரச்சனை நீதிமன்றம் என்ன முடிவு செய்கிறதோ அதை பார்ப்போம். 

இரவு நேர விமான சேவை குறித்த கேள்விக்கு:

இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிறுவனங்களும் தனியார் தான். நாங்கள் கடையை திறந்து வைத்து இருக்கிறோம் நீங்கள் விமான சேவையை நடத்துங்கள் என அழைப்பு விடுத்துள்ளோம். 

விரிவாக்கத்திற்கான பகுதியில் நீர் பிடிப்பு பகுதி உள்ளது குறித்த கேள்விக்கு:

அது மிக முக்கிய பிரச்சினையாக உள்ளது. விருதுநகர் மாவட்டத்திற்கு குண்டாறு வழியாக கால்வாய் செல்லும் வழி, அந்த நீரை புதிதாக 90 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்ட மூலம் மாற்று பகுதியில் அனுப்புவதற்கு முயற்சி செய்துவிட்டு அந்த நிலம் முழுமையாக விமான நிர்வாக கட்டுப்பாட்டிற்கு வரும். 

தொடர்ந்து பேசிய மதுரை எம்பி சு.வெங்கடேசன் கூறுகையில்:*

விமான நிலைய ஓடுதள விரிவாக்கத்திற்கு இடையூறாக உள்ள நீர் பிடிப்பு பகுதியை 90 கோடி ரூபாய் செலவில் மாற்றி அமைப்பதற்கு மாவட்ட ஆட்சியர் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே முதல்வரும் நீர்வளத்துறை அமைச்சரும் வருகிற நிதி ஆண்டிலேயே இந்த 90 கோடி ஒதுக்கினால் தான்  விமான நிலைய விரிவாக்க பணியை வேகப்படுத்த முடியும். அடுத்த ஆறு மாத காலத்திற்குள் பாஷா ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று அமைச்சர் சொல்லி இருக்கிறார். அது அடுத்த கட்ட வளர்ச்சிக்கு பேர் உதவியாக இருக்கும் என கூறினார்.

நிருபர் பாஸ்கரன் தேனி நிருபர் பாஸ்கரன் தேனி.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment