by admin on | 2025-02-26 09:46 PM
தேனி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நபரை கைது செய்து கூடலூர் வடக்கு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.
தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் உத்தரவின் பேரில்,உத்தமபாளையம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மேற்பார்வையில் கம்பம் வடக்கு காவல் நிலையஆய்வாளர்பார்த்திபன் மற்றும் சார்புஆய்வாளர்கள்கதிரேசன்,மணிகண்டன்,இளையராஜா ஆகியோர் தலைமையிலில் தனிப்படை அமைக்கப்பட்டு கடந்த 12 .2 .2025 அன்று ஆந்திரமாநிலம் சென்று தங்கி மூன்று தலைமறைவு குற்றவாளிகளை கடந்த வாரம் கைது செய்து நீதிமன்றகாவலுக்குஉட்படுத்தினர்.அதன் தொடர்ச்சியாகதேவதானப்பட்டி,கம்பம் தெற்கு,கூடலூர் வடக்கு ஆகிய காவல் நிலையங்களில் பதியப்பட்ட கஞ்சாவழக்குகளில்தேடப்பட்டு வந்தஆந்திர மாநிலம்பல்நாடு மாவட்டம், சிலகல்லூரிபேட்டயைச் சேர்ந்த சேக் மகபூ சுபானி (33) என்பவரை ஆந்திராவில் வைத்து தனிப்படையினர் கைது செய்துகைதிகள் பரிமாற்ற வாரண்ட்மூலமாக தேனி மாவட்டம் கூடலூர் வடக்கு காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்ததில் மேற்கண்ட கஞ்சாவழக்குகளில் சுபானி சம்பந்தப்பட்டிருப்பது உறுதியானதன் பேரில் அவரை கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.