by admin on | 2025-02-20 04:44 PM
தமிழகத்தில் ஆளுகின்ற திராவிட முன்னேற்றக் கழகத்திற்க்கும், மத்திய பாஜக, மாநில பாஜக தலைவர் அண்ணாமலையிடையே பெரும் கருத்து மோதல் இருந்து வருகிறது. குறிப்பாக மத்திய அரசு தமிழக அரசிற்கு வழங்க வேண்டிய புயல் நிவாரண நிதி, வெள்ள பாதிப்பு நிதிகளை வழங்க மறுத்து வருவதோடு மும்மொழிக் கல்விக் கொள்கையை ஏற்க வற்புறுத்தி வருகின்றனர்.
முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் அண்ணா சாலைக்கு வர பாஜக அண்ணாமலைக்கு தைரியம் உண்டா? என்று கேள்வி எழுப்பி இருந்தார். இந்நிலையில்
அண்ணா சாலைக்கு வர நான் தயார் . இடத்தை குறிப்பிடுங்கள்; தனியாக வருகிறேன்; நீங்கள் தடுத்து நிறுத்திப் பாருங்கள் என்று இன்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பதில் கூறியுள்ளார்.
அறிவாலயத்திற்கு வருவதாக சொன்ன அண்ணாமலை தைரியம் இருந்தால் அண்ணா சாலை வரட்டும் என கூறியிருந்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு பதில் கூறியுள்ளார். இதனால் தமிழகத்தில் பாஜக மற்றும் திமுகஇடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டு தொண்டர்களிடையே
மோதல்போக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.