by admin on | 2025-02-20 04:15 PM
தேனி : பெரியகுளம் LIC கிளை அலுவலகம் முன்பு (20.02.2025) இன்று ஒரு மணி நேரம் பணியை புறக்கணித்து வெளிநடப்பு செய்தும், மதிய உணவு இடைவேளையின் போது 3ம் பிரிவு மற்றும் 4ம் பிரிவு பணியாளர்களுக்கான புதிய பணி நியமனம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்திற்கு சங்க அங்கீகாரம் வழங்கிட மத்திய அரசையும், எல் ஐ சி நிர்வாகத்தை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை பெரியகுளம் கிளை தலைவர் நாக பாண்டி தலைமை தாங்கினார். பெரியகுளம் கிளைச் செயலாளர் சசிகுமார் ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கி பேசினார். பென்சனர் சங்கம் சார்பாக குருசாமி போராட்டத்தை வாழ்த்தி பேசினார். லியாபி முகவர்கள் சங்கம் சார்பாக நல்லதம்பி போராட்டத்தை வாழ்த்தி பேசினார். பின்னர், கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. LIC ஊழியர்கள் மற்றும் LIC முகவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். கிளை பொறுப்பாளர் கரந்தமலை நன்றி கூறினார்.
நிருபர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி .