by Vignesh Perumal on | 2025-07-01 11:13 AM
தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் ஜிన్నாரம் மண்டலம் ஐடிஏ பொல்லாரம் தொழிற்பேட்டையில் உள்ள எஸ்.பி.இண்டஸ்ட்ரீஸ் என்ற ரசாயன ஆலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட பயங்கர விபத்தில் பலி எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 35 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சங்காரெட்டி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் எஸ்.பி.இண்டஸ்ட்ரீஸ் ரசாயன ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. விபத்து நடந்த நேரத்தில் ஆலையில் பணியாற்றிய பல தொழிலாளர்கள் தீயில் சிக்கினர். வெடி விபத்தினால் ஏற்பட்ட தீ விபத்து, ஆலையின் பெரும் பகுதிக்கு பரவியது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆரம்பத்தில் விபத்தில் சில உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழப்போர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வந்தது. தற்போது, இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த 35 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. அதேசமயம், 57க்கும் மேற்பட்டோர் உடல்நிலை தேறி வீடு திரும்பியுள்ளனர் என சங்காரெட்டி மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஆலையின் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டதா, வெடி விபத்துக்கான சரியான காரணம் என்ன என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டு, காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தெலங்கானாவில் ஏற்பட்ட இந்த ரசாயன ஆலை விபத்து, தொழில் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளதுடன், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!