by Vignesh Perumal on | 2025-06-30 05:26 PM
தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட முப்பத்தைந்து வார்டுகளிலும் நிலவும் மோசமான சுகாதாரச் சீர்கேடுகள் குறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்தை ஈர்க்கும் வகையில், இந்து எழுச்சி முன்னணி – தேனி மாவட்டம் சார்பில் ஒரு நூதன விழிப்புணர்வு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை ஜூலை 1, 2025 அன்று, தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி வெத்திலை, பாக்குடன் மாவட்ட ஆட்சியரை அழைத்து, தேனி நகரின் அசுத்த சூழ்நிலையை நேரில் பார்வையிட வேண்டுகோள் விடுக்கப்பட உள்ளது.
தேனி நகரின் பல பகுதிகளில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடப்பதாகவும், சாக்கடைகள் நிரம்பி வழிவதாகவும், தெருப்பாதைகள் குண்டும் குழியுமாக மாறி பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருவதாகவும் இந்து எழுச்சி முன்னணி புகார் தெரிவித்துள்ளது. இது குறித்து நகராட்சி அலுவலகத்திற்கு பலமுறை எழுத்து மூலமாகவும், வாய்மொழியாகவும் புகார்கள் அளிக்கப்பட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நகராட்சிக்குத் தேவையான அனைத்து வரிகளையும் மக்கள் நேர்மையாக செலுத்தி வரும் நிலையிலும், நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியமான போக்கால் பொதுமக்கள் பெரும் துன்பத்திற்குள்ளாவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், மக்களின் துயரத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக இந்து எழுச்சி முன்னணி தெரிவித்துள்ளது. இதனை வலியுறுத்தும் வகையில், நாளை (01.07.2025) காலை 11.30 மணிக்கு ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில், தமிழர்களின் மரபையும், பணிவையும் வெளிப்படுத்தும் விதமாக, ஒரு தட்டில் வெத்திலை மற்றும் பாக்கு வைத்து மாவட்ட ஆட்சியருக்கு நேரடியாக அழைப்பு விடுக்கப்படும். அரசு ஐ.டி.ஐ., கருவேல நாயக்கன்பட்டியில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிச் சென்று, இந்த விழிப்புணர்வு நிகழ்வு நிறைவடையும்.
இந்த நிகழ்வு, எந்தவித அரசியல் நோக்கமும் அற்ற சமூக நலன் சார்ந்த செயல் என இந்து எழுச்சி முன்னணி – தேனி மாவட்டம் தெரிவித்துள்ளது. தேனி மக்களின் வாழ்வாதாரம் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பிற்காகவே இந்த நிகழ்வு நடத்தப்படுவதாகவும், இதன் மூலம் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என நம்புவதாகவும் மாவட்ட பொதுச் செயலாளர் திரு. மாய. லோகநாதன் ஜீ மற்றும் மாவட்ட செயலாளர் திரு. இராமமூர்த்தி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!